Breaking: தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.960 உயர்ந்தது: வெள்ளியின் விலையும் கிடுகிடு உயர்வு.!

Breaking: தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.960 உயர்ந்தது: வெள்ளியின் விலையும் கிடுகிடு உயர்வு.!



Gold silver price today 14 dec 2023

இந்தியாவில் தங்கத்தின் மீதான பல்வேறு வரிகளின் காரணமாக, விலை என்றுமே உச்சத்தில் தான் இருக்கிறது. தங்கத்தின் விலை உயர்ந்தாலும், நுகர்வு குறைவதில்லை.

இந்நிலையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, 22 கேரட் தங்கம் ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து, ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.79.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.79,500-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ.2.50 காசுகள் உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக குறைவது போன்று தோன்றி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிர்ச்சி தரும் வகையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.