அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை! ஆட்டத்தை ஆட ஆரம்பிச்சுடுச்சு....நகைபிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் தங்கச் சந்தை இன்று எதிர்பாராத வகையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை திடீரென உயர்ந்து தங்கச் சந்தை மற்றும் நகை வாங்குபவர்கள் இடையே பெரும் கவனம் பெற்றுள்ளது.
காலை தங்க விலையில் முதல் உயர்வு
கடந்த ஐந்து நாட்களாக தொடர்ச்சியாக குறைந்து வந்த தங்க விலை இன்று (நவம்பர் 19) காலை முதலே உயர்வை பதிவு செய்தது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹11,500 ஆகவும், சவரன் ₹800 உயர்ந்து ₹92,000 ஆகவும் விற்பனையானது.
சில மணி நேரங்களில் மீண்டும் அதிரடி உயர்வு
சந்தை அமைதியாகும் முன்பே மதியம் தங்க விலை மீண்டும் உயர்ந்தது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு மேலும் ₹100 உயர்ந்து ₹11,600 ஆகவும், சவரன் ₹92,800 ஆகவும் உயர்ந்தது. இது இன்று ஒரே நாளில் விலை இருமுறை உயர்ந்த அதிர்ச்சியான மாற்றமாகும்.
நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
ஒரே நாளில் சவரன் ₹1,600 உயர்ந்துள்ளதால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பலர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். திருமணம், விழா போன்ற நிகழ்வுகளுக்காக தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு இந்த திடீர் உயர்வு சுமையாகியுள்ளது.
தங்க சந்தை தொடர்ந்து மாற்றமடைந்து வரும் நிலையில், வரும் நாட்களில் விலை எந்த திசையில் செல்கிறது என்பதைக் கவனிக்க நகைப்பிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.