சமையல் எரிவாயு விலை குறைவு: மாதம் முதல்நாளே மகிழ்ச்சி செய்தி..!



Gas Cylinder Price Reduced July 1 2025

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 58 குறைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதம் முதல் தேதியும் சமையல் எரிவாயு நிறுவனங்களால் சிலிண்டர் விலை அளவில் நிர்ணயம் செய்யப்பட்டு உத்தரவிடப்படுகிறது. கடந்த பல மாதங்களாக வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் இருக்கும் நிலையில், வணிக சிலிண்டர் மட்டும் ஏற்ற இறக்கத்துடன் தொடர்கிறது.

விலை குறைவு:

இந்நிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.58 குறைந்துள்ளது‌. ஜூலை 1 ஆம் தேதி முதல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,823 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையில் தற்போது எந்த விதமான மாற்றம் இல்லாமல் அப்படியே நீடிக்கிறது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். 

இதையும் படிங்க: என்னம்மா.. இப்படி பண்ணலாமா... ஓடும் ரயிலில் மூதாட்டியின் முடியை இழுத்து, சரமாரியாக அடித்து சண்டை போட்ட பெண்! வைரலாகும் வீடியோ...

போர் அச்சம் நீங்கியது‌:

இஸ்ரேல் - ஈரான் இடையே நடந்த போர் காரணமாக எண்ணெய் விநியோகம் தட்டுப்பாடு அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போர் 12 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதால் கச்சா எண்ணெய் விநியோகம் உலகளவில் சீரடைந்தது. ஈரானில் கிடைக்கும் 20 விழுக்காடு எண்ணெய் உலக நாடுகள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்தால் இந்த விலையில் உச்சம் இருக்கலாம் என்றும் கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து! 21 பேர் படுகாயம்! கோவையில் பரபரப்பு...