ஒரே மாதத்தில் 2வது முறையாக சிலிண்டர் விலை உயர்வு.. குடும்ப தலைவிகள் அவதி..!
இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையை நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் இன்று வீட்டு உபயோக சிலிண்டர் விலை 3 ரூபாய் அதிகரித்து 1,018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 7ம் தேதி, தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை, கடந்த மார்ச் மாதத்தில் 50 ரூபாய் அதிகரித்து 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த மாதம் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ஏற்றம் கண்டதா ரூ.1,000 ஐ தாண்டியுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை இரண்டு முறை உயர்ந்துள்ளது. முதல் முறை, ரூ.50 அதிகரித்து 1,015ரூபாய்க்கு விற்பனையான சிலிண்டர், தற்போது மேலும் ரூ.3 அதிகரித்து ரூ.1018.50க்கு விற்பனையாகிறது.