நல்லா நாரதர் வேலை பார்க்கிறார்.! லாஸ்லியாவை செமையாக வறுத்தெடுத்த பிரபல நடிகர்!!

நல்லா நாரதர் வேலை பார்க்கிறார்.! லாஸ்லியாவை செமையாக வறுத்தெடுத்த பிரபல நடிகர்!!


dancer sathish tweet about losliyaa

 பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.மேலும் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3ல் 15 போட்டியாளர்களுள் ஒருவராக இலங்கையை சேர்ந்த பிரபல செய்திவாசிப்பாளரான லாஸ்லியா கலந்துகொண்டுள்ளார்.

losliyaa

அவரது குழந்தைத்தனமான பேச்சிற்கெனவே நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே லாஸ்லியாவிற்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.மேலும் ஒவ்வொரு நாள் காலையிலும் ஒலிபரப்பப்படும் பாடலுக்கு இவர் போடும் நடனத்தை பார்பதற்காகவே தனி ரசிகர் கூட்டமே உள்ளது. மேலும் இவருக்கென லாஸ்லியா ஆர்மியும் உருவானது.

losliyaa

சமீபகாலமாக லாஸ்லியா செய்யும் செயல்களால் லாஸ்லியா ரசிகர்களே வெறுக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில்  மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி  தற்போது  நடன இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்து வரும் சதீஷ் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் அவர் இப்போதுதான் லாஸ்லியா தனது உண்மையான முகத்தை காண்பிக்கிறார். சாக்ஷி மற்றும் கவின்க்கு இடையே நல்ல நாரதர் வேலை செய்கிறார். மிகவும் மர்மமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.