வரலாறு காணாத வீழ்ச்சி: டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பில் தொடர் சரிவு!.. ஆட்டம் காணும் பங்குச்சந்தைகள்..!

வரலாறு காணாத வீழ்ச்சி: டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பில் தொடர் சரிவு!.. ஆட்டம் காணும் பங்குச்சந்தைகள்..!


Continued depreciation of the rupee against the dollar

கொரோனா பெருந்தொற்று அச்சத்தால் பெரும்பான்மையான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக நாடுகள் மட்டுமன்றி மக்களும் பொருளாதார சிக்கலுக்கு உள்ளாயினர்.இதற்கிடையே வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல நாடுகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், உக்ரைன்  மீதான ரஷியா தொடுத்துள்ள போரரின் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. மேலும், இந்த போர் 8 மாதங்கள் நீடித்துவரும் நிலையில், கச்சா எண்ணெய், உணவு தானியங்களில் விலை அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து பணவீக்கம் அதிகரித்துள்ளது.

பண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன. இந்த நடவடிக்கையால், அன்னிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலரின் தேவையை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.

மேலும், முதலீடுகளை பல நாடுகளும் டாலருக்கு மாற்றி வருவதால் டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இந்திய பங்குச்சந்தைகளை பொறுத்தவரை, அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்று வருவதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சரிவைக் அந்தித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.02 என்ற அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றைய பங்குச்சந்தை நேர முடிவில் ரூபாயின் மதிப்பு மேலும் 66 காசுகள் சரிந்து ரூ.83.02 என்ற நிலையை எட்டியுள்ளது.