ஆசியா கோப்பை:வெல்ல துடிக்கும் பாகிஸ்தான், வெளுத்து வாங்குமா இந்தியா? இதுவரை யார் முன்னிலை?

இந்தியாவில் கிரிக்கெட் என்றாலே ரசிகர்கள் அதிகம்தான். அதிலும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி என்றால் சொல்லவே தேவை இல்லை. சாப்பிடாமல், தூங்காமல் கூட ரசிகர்கள் போட்டியினை பார்ப்பார்கள். இந்நிலையில் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நீண்ட நாட்களுக்கு பிறகு காண ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
2018 வருடத்திற்கான ஆசிய கோப்பை போட்டி யுனைடெட் அரபு அமீரகத்தில் 15ம் தேதி
தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை, பங்களாதேஷ் விளையாண்ட போட்டியில் இலங்கையை தோற்கடித்து பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் ஹாங்காங்கை பந்தாடி வெற்றி பெற்றது பாக்கிஸ்தான் அணி. இந்நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி வரும் 19ம் தேதி நடக்கிறது. சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் மோதும் முதல் போட்டி இதுவாகும். இதுவரை ஆசிய கோப்பை போட்டியில் இந்த இரு அணிகளும் 12 முறை மோதியுள்ளது. அதில் இந்தியா 6 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் சந்தித்துளளது.