விளையாட்டு Asia cup 2018

ஆசியா கோப்பை: மீண்டும் மண்ணை கவ்வியது இலங்கை; ஆப்கானிஸ்தான் அபார வெற்றி!!

Summary:

afhkanistan won srilanka in 3rd match

அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இது குரூப் "பி" பிரிவில் இரண்டாவது போட்டியாகும். இந்த பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை, வங்கதேசத்திடம் ௧௩௭ ரன்களில் படுதோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியிலும் இலங்கை அணி கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானிடம் ௯௭ ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் படுதோல்வியடைந்துள்ளது.

Mohammad Shahzad started off on a usual note before perishing for 34.

ஆசியா கோப்பையின் மூன்றாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முஹம்மத்  ஷாஷாத் மற்றும் இஷானுல்லாஹ் ஜெனட் நல்ல ஆப்கானிஸ்தானுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தனர். இலங்கையின் தனஜெயா வீசிய 12 வது ஓவரில் முஹம்மத்  ஷாஷாத் 37 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 57. 

Rahmat Shah though held the innings together and scored a fine 72.

பின்னர் வந்த ரஹ்மத் ஷா அரைசதம் அடித்தார். 12 வது ஓவரில் ஜெனட் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் வந்த வீரர்கள் ஓரளவிற்கு நிலைத்து நின்று ஆட ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 249 ரன்கள் எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் ரஹ்மத் ஷா அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியின் சார்பில் திசார பெரேரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

Sri Lanka fought back by removing the openers and then sent back Asghar Afghan as well.

 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாய்  இருந்தது. முஜீப் உர் ரஹ்மான் வீசிய முதல் ஓவரிலேயே குஷால் மெண்டிஸ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினர். எனவே இலங்கை அணி தனது முதல் விக்கெட்டை ரன் எதுவும் எடுக்காமலே இழந்தது. பின்னர் வந்த தனஞ்சய டீ சில்வா சிறிது நேரம் நிலைத்து ஆட 13 ஓவரில் இலங்கை அணி 50 ரன்களை கடந்தது. ஆனால் அடுத்த ஓவரிலேயே தனஞ்சய டீ சில்வா 23 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். 

Mujeeb Zadran dented Sri Lanka early by removing Kusal Mendis for a duck.

தான்பின் இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒன்றன்பின் ஒன்றாக வெளியேற துவங்கினர். எனவே 42 ஓவரில் வெறும் 158 ரன்கள் மட்டுமே எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இலங்கை. 

இதன் மூலம் தனது சிறப்பான பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவுசெய்தது. அந்த அணியின்  முஜீப் உர் ரஹ்மான், நயிப், நபி, கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 72 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மத் ஷா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட்டர்.

Rahmat Shah for his responsible 72 was awarded the Man of the Match.

ஐந்து முறை ஆசிய கோப்பையை வென்றுள்ள இலங்கை அணி இந்த தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது ரசிகர்களை பெரிதும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
 


Advertisement