இராணுவ படைசூழ மீட்கப்படும் வெளிநாட்டவர்கள்? ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு.. வைரலாகும் வீடியோ.!
வெளிநாட்டவர் பயணிக்கும் விமானத்துக்கு அமீரக விமானப்படை பாதுகாப்பு வழங்குவதாக வீடியோ வைரலாகி வருகிறது.
பழிவாங்கும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ள ஈரான் என்ன செய்ய போகிறது என உலக நாடுகள் காத்திருக்கின்றன. அதே நேரத்தில், அமீரகத்தில் தவிக்கும் சொந்த நாட்டவரை மீட்க முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஈரான் மீது தாக்குதல்:
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்த போர் மத்திய கிழக்கு நாடுகளில் 2023ம் ஆண்டு முதல் போர் பதற்றத்தை ஏற்ப்டுத்தி இருந்தது. இதனிடையே, இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து ஈரானின் மீது கூட்டு இராணுவ தாக்குதலை முன்னெடுத்தது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் என கருதப்பட்ட அயாத்துல்லா காமினி கொல்லப்பட்டார். மேலும், ஈரானின் உயர் பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள், இராணுவ தளபதிகள் என 40 பேர் கொல்லப்பட்டனர். மொத்தமாக 1000 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் சொல்லப்பட்டது.
இதையும் படிங்க: குவைத், துபாய், கத்தார், அபுதாபியில் அடுத்தடுத்து சத்தம்.. பதறும் மக்கள்.. நடப்பது என்ன?
அமெரிக்காவின் எச்சரிக்கை:
இந்த விஷயத்துக்கு அமெரிக்கா, இஸ்ரேலை பழிவாங்குவதாக அறிவித்துள்ள ஈரான், அமீரகம் - ஈரானின் நீர்முனையை மூடி இருக்கிறது. இதனால் கச்சா எண்ணெயுடன் காத்திருக்கும் எண்ணெய் கப்பல்கள் நீர்முனையை தாண்ட முடியாமல் அங்கேயே இருக்கிறது. இஸ்ரேல், அமெரிக்காவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் ஈரானின் நீர்முனையை தாண்டி செல்ல முயன்றால் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ஈரானின் அரசுப்படைகள் ஒரு வாரத்துக்குள் சரணடையாத பட்சத்தில், அமெரிக்கா-இஸ்ரேல் ஈரானை ஒட்டுமொத்தமாக தாக்கி அழிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தை தாக்கிய ஈரான்:
இவ்வாறான போர் பதற்றம் மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமல்லாது, அதன் நட்பு நாடுகளையும் போருக்குள் இறக்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலகளவில் போர் அச்ச சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த போருக்கு நடுவே, அமெரிக்கா படைகள் இருக்கும் கத்தார், துபாய், அபுதாபி, பஃக்ரைன் மீது ஈரான் திடீர் தாக்குதலை முன்னெடுத்தது. மேலும், அமெரிக்கா துருப்புகள் அமீரகத்தின் நிலத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வாங்கியதே, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த காரணமாக அமைந்துள்ளது எனவும் ஈரான் அரசு குற்றம்சாட்டி தாக்குதல் நடத்தியது.
வீடியோ வைரல்:
இதனால் துபாய், ஷார்ஜா, ரசல்-கை-மாக், அபுதாபி, குவைத், பஃக்ரைன் என அமீரகத்தின் பல நாடுகளுக்கு விமான சேவை அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா விசாவில் அமீரகத்துக்குச் சென்ற வெளிநாட்டினர் படிப்படியாக அழைத்து வரப்படுகின்றார். அமெரிக்கர்கள் இங்கிருந்து வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பிற நாடுகளைச் சேர்ந்த மக்களில், தாயகம் திரும்ப விரும்புவோரை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துபாய் உட்பட அமீரகத்தில் இருந்து புறப்படும் குறைந்த அளவிலான பயணிகள் மீட்பு விமானத்தை அமீராகத்தின் விமானப்படை விமானங்கள் பாதுகாப்பாக ஈரான் வான்வெளிக்கு அப்பால் கொண்டு சென்று விடுவதாக கூறப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், இதன் உண்மைத்தன்மை குறித்த தகவல் அமீரக அரசால் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. இந்த வீடியோவை பதிவிட்டு வரும் நெட்டிசன்கள், அமீரக அரசை புகழ்ந்து பேசி வருகின்றனர்.
பயணிகள் விமானத்துக்கு பாதுகாப்பு என வைரலாகும் வீடியோ:
பாதுகாப்புடன் பயணத்தை தொடங்கிய விமானம்:
இதையும் படிங்க: கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரம்.. இந்தியாவுக்கு பச்சைக்கொடி காட்டிய அமெரிக்கா.!