×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரம்.. இந்தியாவுக்கு பச்சைக்கொடி காட்டிய அமெரிக்கா.!

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அமெரிக்கா அனுமதி வழங்கி இருக்கிறது.

Advertisement

இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி கொடுத்துள்ளது.

பதிலடி தாக்குதல்கள்:

அமெரிக்கா - இஸ்ரேல் இராணுவங்கள் இணைந்து பிப்.28ம் தேதி நடத்திய ஈரானின் மீதான தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமினி கொலை செய்யப்பட்டார். இதனால் ஈரான் பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. அந்நாட்டில் தேசிய அளவில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், பதிலடி தாக்குதலை எதிர்கொள்ள அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதையும் படிங்க: குவைத், துபாய், கத்தார், அபுதாபியில் அடுத்தடுத்து சத்தம்.. பதறும் மக்கள்.. நடப்பது என்ன?

கச்சா எண்ணெய் எச்சரிக்கை:

இதனிடையே, அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் தாக்குதலை அமீரகம் அமெரிக்காவுடன் இணைந்து எதிர்கொண்டு வருகிறது. இந்திய பெருங்கடலில் இலங்கைக்கு அருகில் இந்தியாவுக்கு வந்துகொண்டு இருந்த ஈரானின் போர்க்கப்பலை அமெரிக்கா அழித்து இருந்தது. இந்த சம்பவத்தில் 87 பேர் பலியான நிலையில், உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடும் ஏற்பட தொடங்கியுள்ளது. ஈரான் வளைகுடாவின் நீர்முனையை கடக்க கச்சா எண்ணெயுடன் கப்பல்கள் காத்திருக்க, அதனை தாக்கி அழிப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரஷ்யா இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெயை விநியோகம் செய்ய தயாராக இருப்பதாக அறிவித்தது. இந்நிலையில், அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்கிக்கொள்ளலாம் என அறிவித்து இருக்கிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#World news #iran #Dubai #உலக செய்திகள் #ஈரான் #துபாய்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story