×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வித்தியாசமான வியாபார உத்தி..! பேரம் பேசுபவர்களுக்கு பச்சை பை.... பேசாமல் அப்படியே வாங்குபவர்களுக்கு சிவப்பு பை! வியாபாரிகளின் ரகசியத்தை உடைத்து செக் வைத்த பெண்..!!!

வியட்நாமில் கடைகளில் வழங்கப்படும் பைகளின் நிறத்தை வைத்து வாடிக்கையாளர்களின் பேரம் பேசும் பழக்கத்தைக் கணிக்கும் வியாபாரிகளின் வித்தியாசமான உத்தி இணையத்தில் வைரலாகியுள்ளது.

Advertisement

வியட்நாமில் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பேரம் பேசும் பழக்கத்தைக் கண்டறிய, வியாபாரிகள் பைகளின் நிறத்தைப் பயன்படுத்துவதாக வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. சிவப்பு, பச்சை என இரண்டு நிறப் பைகளை வழங்கி, வாடிக்கையாளர்களின் வாங்கும் முறையை அடுத்த கடைகளுக்கும் தெரியப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

சிவப்பு, பச்சை பைகளுக்குப் பின்னால் உள்ள கணக்கு

வியட்நாமில் சில கடைகளில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு நிறங்களில் பைகள் வழங்கப்படுகின்றன. அதிகமாகப் பேரம் பேசிப் பொருட்களை வாங்குபவர்களுக்கு பச்சை நிறப் பையும், கடைக்காரர் கூறும் விலையை அப்படியே கொடுத்து வாங்குபவர்களுக்கு சிவப்பு நிறப் பையும் வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: கடுமையான தலைவலி , கண் எரிச்சலால் 4 மாதங்களாகத் கஷ்டப்பட்ட நபர்! பரிசோத்த மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி... இப்படியெல்லாம் நடக்குமா? பகீர் பின்னணி...!!!

இதன்படி, பச்சை நிறப் பையுடன் அடுத்த கடைக்கு வரும் வாடிக்கையாளர் பேரம் பேசுவார் என வியாபாரிகள் முன்கூட்டியே கணித்துக் கொள்வார்களாம். அதற்கேற்ப ஆரம்பத்திலேயே கூடுதல் விலையைக் கூறுவதாகவும் இந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகளின் உத்தியை அறிந்த சுற்றுலாப் பயணி

இந்த நடைமுறையை அறிந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர், தான் வாங்கிய பொருட்களை அடுத்த கடைக்குச் செல்வதற்கு முன்பு சிவப்பு நிறப் பைக்குள் மாற்றி வைத்துள்ளார். இதன் மூலம் பேரம் பேசும் வாடிக்கையாளர் என்ற அடையாளம் தெரியாமல் பார்த்துக்கொண்டு, அடுத்தடுத்த கடைகளில் பொருட்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்

வாடிக்கையாளர்களின் பழக்கத்தைப் பைகளின் நிறம் மூலம் அடையாளம் காணும் இந்த வித்தியாசமான வியாபார உத்தி குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சுற்றுலா செல்லும் இடங்களில் சிறிய விஷயங்களைக்கூட கவனிக்க வேண்டியதன் அவசியத்தை இந்தத் தகவல் நினைவூட்டுவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: அம்மாவை தேடி சவப்பெட்டியைச் சுற்றி சுற்றி வந்த 3 வயது குழந்தை! கண்கலங்க வைக்கும் காட்சி..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#வியட்நாம் வியாபாரிகள் #பை நிற ரகசியம் #Vietnam Shopping #Bargaining Trick #வைரல் தகவல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story