×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அம்மாவை தேடி சவப்பெட்டியைச் சுற்றி சுற்றி வந்த 3 வயது குழந்தை! கண்கலங்க வைக்கும் காட்சி..!!!

மலேசியாவில் புற்றுநோயால் உயிரிழந்த தாயின் சவப்பெட்டியைச் சுற்றி விளையாடிய 3 வயது குழந்தையின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. தாயின் இழப்பை அறியாத குழந்தையின் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Advertisement

மலேசியாவில் புற்றுநோயால் உயிரிழந்த பள்ளி ஆசிரியையின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியைச் சுற்றி, அவரது 3 வயது மகன் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தாய் தன்னை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பது புரியாமல், அவர் எங்கோ ஒளிந்துகொண்டிருப்பதாக நினைத்து குழந்தை தேடிய காட்சி பலரையும் நெகிழ வைத்துள்ளது. 

தாயைத் தேடி சவப்பெட்டியைச் சுற்றிய குழந்தை

அஸ்வானி என்ற பள்ளி ஆசிரியர் புற்றுநோயுடன் நீண்ட காலம் போராடி உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச்சடங்கின்போது, 3 வயது மகன் சவப்பெட்டியைச் சுற்றி வந்தது. தாய் தன்னுடன் விளையாடுவதாக நினைத்து அவரைத் தேடியுள்ளார். தாயின் மறைவைப் புரிந்துகொள்ள முடியாத அந்தப் பிஞ்சின் செயல், அங்கிருந்த உறவினர்களையும் வீடியோவைப் பார்ப்பவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: இன்னும் 2 மாதத்தில் திருமணம்..! அரசு பேருந்து உரசலால் சிக்கிய சட்டை.. அடுத்த நொடி சக்கரத்தில் சிக்கி பலியான வாலிபர்..! கண்ணீருடன் குடும்பதினர் போராட்டம்...!!!

புற்றுநோயால் தாயை இழந்த குடும்பம்

நீண்ட காலமாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அஸ்வானி, இறுதியில் உயிரிழந்தர். அவரது மறைவு குடும்பத்தினருக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக, தாயின் அன்பும் அரவணைப்பும் தேவைப்படும் வயதில் குழந்தை அவரைப் பிரிந்திருப்பது பலரது கவலையையும் அதிகரித்துள்ளது.

சமூக வலைதளங்களில் குவியும் இரங்கல்கள்

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். தாயை இழந்த குழந்தைக்கு எதிர்காலத்தில் இந்த இழப்பைச் சமாளிக்கும் வலிமை கிடைக்க வேண்டும் என்றும் பலர் கருத்து பகிர்ந்துள்ளனர். 

 

இதையும் படிங்க: தாயுடன் சென்ற 9 வயது சிறுமி கடத்தல்! 7 ஆண்டுகள் அறைக்குள் பூட்டி வைத்த கொடூரன்... கொரோனா காலத்தில் சிறுமிக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு! அம்பலமான பகீர் உண்மைகள்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மலேசியா வைரல் வீடியோ #அஸ்வானி ஆசிரியர் #தாயை இழந்த குழந்தை #Malaysia Viral Video #Cancer Awareness
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story