பணத்துக்காக இப்படியா! ரூ.5 கோடி தான் முக்கியம் ! மருத்துவர் செய்த அதிர்ச்சி செயல்! வினோத சம்பவம்!
பணத்துக்காக இப்படியா! ரூ.5 கோடி தான் முக்கியம் ! மருத்துவர் செய்த அதிர்ச்சி செயல்! வினோத சம்பவம்!
பிரிட்டனில் 49 வயதான மருத்துவர் நீல் ஹாப்பர், காப்பீட்டுத் தொகையை 5 லட்சம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.5.4 கோடி) பெறவேண்டும் என்ற நோக்கில் தனது முழங்கால்களுக்கு கீழே இரு கால்களையும் விருப்பமோடு அகற்றியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது செயல் மோசடி என சந்தேகிக்கப்படுவதால், காப்பீட்டு நிறுவனங்கள் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
விசாரணை நடைபெறும் நிலையில், நீல் ஹாப்பர் இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்றும், மற்றொரு மருத்துவரின் உதவியுடன் இந்த செயலுக்கு துணைபோனதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. மேலும், முழங்கால்களை சேதமின்றி அகற்றும் வழிகள் குறித்து விளக்கும் வீடியோக்களை ஒரு வலைத்தளத்தில் இருந்து வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது மட்டுமல்லாது, தன்னை ரத்த நாளப்பிரச்சனை உள்ளவர் எனக் கூறி, “இது விரைவில் மோசமாகும்” என காப்பீட்டு நிறுவனங்களை நம்ப வைக்க முயற்சி செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கல் குழந்தை! பெண்ணின் வயிற்றில் கல்லாய் மாறிய மனித கரு! 30–40 ஆண்டுகள் கழித்து தான்.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்..
இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியவுடன், சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மருத்துவத்துறையில் பணியாற்றும் ஒருவரால் இப்படியான செயல் நடத்தியது, பொதுமக்களின் நம்பிக்கையை பெரிதும் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.
இதையும் படிங்க: உலகத்தில் அடுத்தடுத்து நடக்கும் பாபா வாங்காவின் முன்கணித்த கணிப்புகள்! இனி நடக்கப்போவது என்னென்ன? அதிர்ச்சியில் பொதுமக்கள்...