பார்க்கவே பயமா இருக்கு.... மரமாக மாறும் மனிதர்! இந்த நோய் வர அதிர்ச்சி காரணம்? வாழ்நாள் முழுவதும் தீராத வேதனை...!!!!
மர மனித நோய் எனப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் அரிய மரபணுக் கோளாறு. இதன் அறிகுறிகள், சிகிச்சை சவால்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
‘மர மனித நோய்’ என்று அழைக்கப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ், உலகில் மிகவும் அரிதாகக் காணப்படும் மரபணுக் கோளாறுகளில் ஒன்றாகும். குறிப்பிட்ட HPV வைரஸ்களை எதிர்த்துப் போராடும் உடலின் நோய் எதிர்ப்பு திறன் பாதிக்கப்படும்போது இந்த நோய் உருவாகிறது. இதனால் கைகள், கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் மரப்பட்டைகள் அல்லது வேர்களைப் போன்ற கடினமான மருக்கள் கட்டுப்பாடின்றி வளரத் தொடங்குகின்றன.
HPV எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவதால் ஏற்படும் மாற்றங்கள்
இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களின் அன்றாட வாழ்க்கையையே கடுமையாக பாதிக்கக்கூடும். குறிப்பாக சூரிய ஒளியில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது அவர்களுக்கு மிகவும் அவசியமாகிறது. தோலில் உருவாகும் தடிமனான வளர்ச்சிகள் நடமாட்டம் உள்ளிட்ட இயல்பான செயல்களிலும் சிரமத்தை ஏற்படுத்தும்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகும் மீண்டும் தோன்றும் மருக்கள்
வங்காளதேசம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சில நோயாளிகளுக்கு இந்த வளர்ச்சிகளை அகற்ற பலமுறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. ஆனால், சிகிச்சைக்குப் பிறகு சிறிது காலத்திலேயே அவை மீண்டும் தோன்றியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்டகாலமாக சிகிச்சை மற்றும் மருத்துவ கண்காணிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
முழுமையான சிகிச்சை இன்னும் கண்டறியப்படவில்லை
மருத்துவ அறிவியலில் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் நோய்க்கு இதுவரை நிரந்தரமான முழுமையான தீர்வு கண்டறியப்படவில்லை. சில சிகிச்சை முறைகள் மூலம் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும், தோலில் உருவாகும் வளர்ச்சிகளை அகற்றவும் முடியும். இருப்பினும் அவை மீண்டும் தோன்றுவதற்கான வாய்ப்பு இருப்பதால், நோயாளிகளுக்கு தொடர்ச்சியான மருத்துவ பராமரிப்பு தேவைப்படுகிறது.
குறிப்பாக தோல் பாதிப்புகள் மற்றும் சூரிய ஒளி தொடர்பான சிக்கல்களைத் தொடர்ந்து கண்காணிப்பது முக்கியமாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக மர மனித நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடல் ரீதியான சிரமங்களுடன் மட்டுமல்லாமல், நீண்டகால சிகிச்சையால் ஏற்படும் மன அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதையும் படிங்க: நீங்களே இப்படி செஞ்சா எப்படி? குழந்தைகள் கண் முன்னாடியே இரு பெண்கள் செய்த அந்த காரியம்.... சிசிடிவி-யில் சிக்கிய காட்சி!!!