அடக்கொடுமையே! ஏர்போர்ட்டில் தரையிறங்கிய விமானம்! நொடிப்பொழுதில் இறக்கை சுழன்றதால் தலை நசுங்கி பலியான பாதுகாப்பு படை வீரர்...! ஷாக் வீடியோ.!!!
சோமாலியாவின் துசமாரெப் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் சுழலும் இறக்கை மோதி போலீஸ் பாதுகாப்புப் படை வீரர் முக்தார் காசிம் உயிரிழந்தார். சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் உள்ள துசமாரெப் விமான நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில், போலீஸ் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். தரையிறங்கிய விமானத்தின் சுழலும் இறக்கை அவரது தலையில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இந்த விபத்து குறித்து சோமாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பதவியேற்பு விழாவுக்காக விமானத்தில் வந்த குழு
உயிரிழந்தவர் முக்தார் காசிம் சமய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மொகடிஷு நகர போலீஸ் தலைமை அதிகாரி மாலின் மஹ்தியின் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்தார்.
இதையும் படிங்க: நீதி வேண்டும்... பாலியல் தாக்குதலால் துடிதுடித்து இறந்த 10 வயது சிறுமி! குற்றவாளிகள் தண்டனையின்றி திரிகிறார்கள்... பகீர் வீடியோ..!!!
கல்முடுக் மாநிலத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள லிபன் அகமது ஹசனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, போலீஸ் தலைமை அதிகாரியும் அவரது பாதுகாப்புக் குழுவினரும் துசமாரெப் நகருக்கு விமானத்தில் வந்துள்ளனர். விமானம் தரையிறங்கியபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
சுழலும் இறக்கை மோதியதில் பரிதாப உயிரிழப்பு
விமானம் தரையிறங்கியதும் முக்தார் காசிம் படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கி நடந்துசென்றுள்ளார். அப்போது விமானத்தின் இயந்திரம் முழுமையாக நிறுத்தப்படாததால் சுழலும் இறக்கை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை கவனிக்காத அவர் அருகே சென்றபோது, இறக்கை அவரது தலையில் பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
முக்தார் காசிமின் மறைவுக்கு அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சோமாலிய போலீஸ் படையின் 'ஹரமகாத்' பிரிவில் அவர் சிறப்பாகப் பணியாற்றியவர் என்றும் பாராட்டியுள்ளனர்.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட விமான நிலைய வளாகத்திலேயே இந்த விபத்து நடந்துள்ளது. விமானம் தரையிறங்கிய பிறகு பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.