என் உயிரே போனாலும் என்னோட உடம்பை தொட விடமாட்டேன்...! ஹோட்டல் அறையில் பெண்ணிடம் நெருங்கி வந்த மேற்பார்வையாளர்... அடுத்த நொடி மாடியில் இருந்து குதித்த பெண்! பதறவைக்கும் காட்சி...!!!
ஏமனில் ஹூதி அமைப்பைச் சேர்ந்த நபர் பாலியல் வன்கொடுமைக்கு முயன்றதாகக் கூறப்படும் நிலையில், ஹோட்டல் கட்டிடத்தில் இருந்து பெண் ஒருவர் குதித்தத வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
ஏமனில் ஹூதி அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற நிலையில், அவரிடமிருந்து தப்பிக்க பெண் ஒருவர் ஹோட்டல் கட்டிடத்தில் இருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ஹோட்டலில் பெண்ணிடம் அத்துமீற முயற்சியா?
ஏமன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அங்கு வந்த ஹூதி அமைப்பைச் சேர்ந்த மேற்பார்வையாளர் ஒருவர் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.
அவரிடமிருந்து தப்பிக்க வேறு வழியின்றி அந்தப் பெண் ஹோட்டல் கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதித்தார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி, 23 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்
ஹூதி அமைப்பினரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சிக்கும் வாசகங்களுடன் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த பலரும் பெண்ணுக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் கொடுமைக்கு எதிராகக் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.