15 வயது மாணவனின் கழுத்து, முதுகில் ஆசிரியர் செய்த அந்த விஷயம்.... வெளிச்சதுக்கு வந்த 25,000 மெசேஜ்! தகாத உடலுறவு கொண்ட சிறப்புக்கல்வி ஆசிரியர்...!!!
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 15 வயது மாணவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சிறப்புக்கல்வி ஆசிரியர் மீது ஏழு பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஃப்ரீஹோல்ட் இடைநிலைப் பள்ளியில் பணியாற்றிய சிறப்புக்கல்வி ஆசிரியர் அலிசன் ஹேவ்மேன்-நீட்ராச் (44) மீது, 15 வயது மாணவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஏழு பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பள்ளி நிர்வாகத்துக்கு வந்த புகாரால் தொடங்கிய விசாரணை
எட்டாம் வகுப்பு மாணவனின் கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் ஆசிரியை தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், அவருடன் நெருக்கமாக பழகியதாகவும் சக ஆசிரியர் ஒருவர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 2024 ஜூன் மாதம் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். துணை முதல்வரின் தகவலையும் தொடர்ந்து போலீசார் வழக்கை தீவிரமாக விசாரித்தனர்.
25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் கண்டுபிடிப்பு
விசாரணையின்போது, ஆசிரியையும் மாணவரும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகளை பரிமாறிக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் மாணவர் குற்றச்சாட்டுகளை மறுத்ததாக கூறப்பட்டாலும், கைப்பேசி ஆதாரங்கள் மற்றும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளிவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பல்வேறு வழக்குகள்
அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், ஆசிரியைக்கு அந்த மாணவர் மீது அதிகளவிலான தனிப்பட்ட ஈடுபாடு இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடுமையான பாலியல் வன்கொடுமை, குழந்தை தொடர்பான பாலியல் வன்கொடுமை பொருட்கள் தயாரித்தல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குழந்தையின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அலிசன், தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு தொடர்பான மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: ரகசியமாக போலீசுக்கு கால் செய்து 14 வயது சிறுமி சொன்ன அந்த ஒரு வார்த்தை! பல ஆண்டுகளாக நடந்த கொடூரம்... ஒரே நாளில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!!!