மாணவனிடம் இரண்டு வாரத்தில் 2 முறை அத்துமீறிய ஆசிரியை! முதலில் வகுப்பறை அலமாரியில் மாணவனுடன் உடலுறவு.... அடுத்து காரில்...! பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்...!!!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டில் 25 வயது உயிரியல் ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டில் 25 வயது பெண் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். டக்ளஸ்வில்லே பகுதியில் நடந்த இந்த விவகாரம் கல்வி வட்டாரங்களிலும் பெற்றோர்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர் அலெக்சாண்டர் உயர்நிலைப் பள்ளியில் உயிரியல் ஆசிரியையாக பணியாற்றி வந்த மேரிஸ் நிக்கோல்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இரண்டு இடங்களில் நடந்ததாக குற்றச்சாட்டு
தகவலின்படி, கடந்த இரண்டு வாரங்களில் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவருடன் ஆசிரியை தவறான முறையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. காவல்துறை மற்றும் நீதிமன்ற ஆவணங்களில் வெளியான தகவல்படி, ஏப்ரல் 23-ஆம் தேதி பள்ளி வளாகத்திலுள்ள வகுப்பறை அலமாரிக்குள் மற்றும் மே 2-ஆம் தேதி குடியிருப்பு பகுதியொன்றில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் மாணவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
மாணவர்களை கண்காணிக்கும் பொறுப்பில் இருந்த ஆசிரியர் இந்த செயல்களில் ஈடுபட்டதாக கூறப்பட்டதால், அவர் மீது பாலியல் தொல்லை தொடர்பான இரண்டு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் மேரிஸ் நிக்கோல்ஸை கைது செய்தனர்.
33 லட்சம் ரூபாய் பிணையில் விடுதலை
கைது செய்யப்பட்ட ஆசிரியை பின்னர் டக்ளஸ் கவுண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சம் ரூபாய் பிணைத் தொகை நிர்ணயித்தார். அதன்பின் அவர் பிணைத் தொகையை செலுத்தி தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரை டக்ளஸ் கவுண்டி சிறையில் அடைத்திருந்த நிலையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் அறிவிப்பு
ஆசிரியை கைது செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பே, பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோருக்கு அதிகாரப்பூர்வ தகவல் அனுப்பியிருந்தது. அதன்பின் உள்ளூர் போலீசார் பள்ளிக்குச் சென்று சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர்.
பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் பள்ளியுடன் தொடர்புடைய நபர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன. தகவல் கிடைத்த உடனேயே உள்நிலை விசாரணை தொடங்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து மேரிஸ் நிக்கோல்ஸ் பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளன. அவர் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டாரா என்பது குறித்து பள்ளி நிர்வாகம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இதையும் படிங்க: ஒரு வருஷமா நடந்த கொடுமை.... 19 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்! இறுதியில் பெண்ணுக்கு நடந்த பேரதிர்ச்சி....பகீர் சம்பவம்!!!