வாய் பேச முடியாத மகனை எழுத்தால் பேசவைத்த பாசமிகு அன்புத்தாய்.. கல்வி கொடுத்த அசத்தல் ஐடியா..!
Canadian Mother Tattoo Keyboard: மகனின் நிலையை புரிந்துகொண்ட தாய் தனது கையை கருவியாக மாற்றி இருக்கிறார்.
பேச்சு மாற்றுத்திறன் கொண்ட மகனுக்காக தாய் செய்த விஷயம் பாராட்டுகளை குவிகிறது.
11 வயது சிறுவன்:
கனடா நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஜெசிகா ப்ளசர். இவரின் மகன் ஹண்டர் (வயது 11). இவர் வாய்பேச இயலாத நபர் ஆவார். பிறரைப்போல தனது பிள்ளையும் செயல்பட வேண்டும் என எப்போதும் மகனை அன்புடன் கவனித்துக்கொண்டு இருந்த தாய், மகன் சொல்வதை எளிதாக புரிந்துகொள்ள வழியை யோசித்துக்கொண்டு இருந்துள்ளார்.
இதையும் படிங்க: World News: அதிபயங்கரம்... இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு.!
கீபோர்டு:
அச்சமயம், மகனுக்கு தெரிந்த கல்வி என்ற ஆயுதத்தை பயன்படுத்திய ஜெசிகா, தனது மகனுக்காக கையில் கம்பியூட்டர் கீபோர்டை பச்சை குத்தியுள்ளார். இந்த கீபோரில் கம்பியூட்டரில் இருப்பது போல ஆங்கில எழுத்துக்களும், சிரிப்பு, கவலை உட்பட ஒருசில எமோஜியும், அன்பை பரிமாறும் வாசகமும் இருக்கின்றன.
பாராட்டு:
இதனை பயன்படுத்தி சிறுவன் தனது தாயிடம் தனக்கு தேவை என்பதை எழுதி காண்பிக்க, தாயும் அதற்கேற்ப செயல்படுகிறார். தனது மகனின் நிலையை அறிந்து செயல்பட்ட தாயின் அந்த உள்ளம் தற்போது சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: World News: விமானம் விழுந்து நொறுங்கி சோகம்.. 13 பேர் பரிதாப பலி.!