கோபத்தில் இப்படியா செய்வது! வயிற்றுவலி, மூச்சுதிணறலால் மருத்துவமனைக்கு வந்த நபர்! சி.டி. ஸ்கேன் எடுத்ததில் டாக்டர்கள் கண்ட பேரதிர்ச்சி.... அமெரிக்காவில் நடந்த வினோத சம்பவம்..!!!
அமெரிக்காவில் வயிற்றுவலி மற்றும் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரின் சிறுகுடலில் வாழைப்பழம் நிரப்பப்பட்ட ஆணுறையை சிக்கியிருந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
அமெரிக்காவில் வயிற்றுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 34 வயது நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவரது சிறுகுடலில் வாழைப்பழம் நிரப்பப்பட்ட ஆணுறையை சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதை அகற்றிய நிலையில், அவர் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எட்டு மணி நேரம் கடும் அவதி
தகவலின்படி, அந்த நபர் தொடர்ந்து எட்டு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான வயிற்றுவலி, மூச்சுத்திணறல், வாந்தி மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் மேற்கொண்ட சி.டி. ஸ்கேன் பரிசோதனையில், அவரது சிறுகுடலில் வெளிப்பொருள் ஒன்று சிக்கியிருந்தது தெரியவந்தது. பின்னர் மேற்கொண்ட விசாரணையில், அந்த பொருளை அவர் தானாகவே விழுங்கியதாக கூறியுள்ளார்.
அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
நீண்டகாலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கோபத்தின் காரணமாக இந்த செயலில் ஈடுபட்டதாக மருத்துவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவக் குழு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிறுகுடலில் சிக்கியிருந்த பொருளை வெற்றிகரமாக அகற்றியது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால் சில நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் எச்சரிக்கை
மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, கோபம் அல்லது மன அழுத்தத்தின் தாக்கத்தில் செய்யப்படும் இத்தகைய செயல்கள் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக செரிமான அமைப்பில் சிக்கல், குடல் அடைப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 3 வருஷமா கடும் அவதி... நாளுக்கு நாள் அதிகரித்த வலி! கடைசியில் எக்ஸ்-ரேயில் தெரிந்த மர்மம்.... மருத்துவர்களையே ஆடிப்போன அந்த ஒரு தருணம்.!!!