×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3 வருஷமா கடும் அவதி... நாளுக்கு நாள் அதிகரித்த வலி! கடைசியில் எக்ஸ்-ரேயில் தெரிந்த மர்மம்.... மருத்துவர்களையே ஆடிப்போன அந்த ஒரு தருணம்.!!!

சிறுநீர் பிரச்னையால் 3 ஆண்டுகள் அவதிப்பட்ட சீன விவசாயியின் சிறுநீர்ப்பையில் 1.3 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கல்லை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

Advertisement

சீனாவில் 3 ஆண்டுகளாக கடுமையான சிறுநீர் வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி ஒருவரின் வயிற்றுக்குள் இருந்த பிரம்மாண்ட கல் மருத்துவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 56 வயதான சென் என்பவரின் சிறுநீர்ப்பையில் இருந்து 1.3 கிலோ எடையுள்ள கல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. தற்போது அவர் உடல்நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

3 ஆண்டுகள் தொடர்ந்த கடும் அவதி

தெற்கு சீனாவின் குவாங்டாங் பகுதியைச் சேர்ந்த சென், கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி ஏற்படும் கடுமையான சிறுநீர் வலி காரணமாக பெரும் சிரமத்தில் இருந்து வந்துள்ளார். இரவு நேரங்களில் தூங்க முடியாத நிலை ஏற்பட்டதுடன், வெளியூர் பயணங்களையும் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

விவசாய வேலையை பாதிக்கக் கூடாது என்பதற்காக மருத்துவமனை செல்லாமல், தானாகவே மாத்திரைகள் வாங்கிச் சாப்பிட்டு வந்துள்ளார். ஆனால் வலி நாளுக்கு நாள் அதிகரித்ததால் சமீபத்தில் குவாங்டாங் மருத்துவப் பல்கலைக்கழக இணை மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க: கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனைக்கு போன 38 வயது நபர்! பரிசோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி! இன்பத்திற்காக இப்படியா? சுமார் 36 மணி நேர அவதி.. மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!!!

ஸ்கேனில் வெளிவந்த அதிர்ச்சி

மருத்துவமனையில் எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டபோது, சென்னின் சிறுநீர்ப்பை முழுவதையும் ஆக்கிரமிக்கும் அளவுக்கு பெரிய கல் இருப்பது தெரியவந்தது. சுமார் 10 முதல் 13 சென்டிமீட்டர் சுற்றளவில் இருந்த அந்த கல், இரண்டு பெரியவர்களின் கைப்பிடி அளவுக்கு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவரது இரண்டு சிறுநீரகங்களிலும் வீக்கம் ஏற்பட்டிருந்தது. மேலும், ‘இருதரப்பு ஹைட்ரோநெஃப்ரோசிஸ்’ மற்றும் கடுமையான யூரேமியா பாதிப்பு ஏற்படும் ஆபத்தான நிலைக்கும் அவர் தள்ளப்பட்டிருந்ததாக தகவலின்படி கூறப்படுகிறது.

அவசர அறுவை சிகிச்சை

இதையடுத்து மருத்துவர்கள் குழு அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டது. பல மணி நேரம் நீண்ட சிகிச்சைக்குப் பிறகு, சென்னின் உடலிலிருந்து 1.3 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கல் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

தற்போது சென் நலமாக குணமடைந்து வருகிறார். போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவது மற்றும் புரோஸ்டேட் வீக்கம் போன்ற காரணங்களால் இத்தகைய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உடலில் லேசான அறிகுறிகள் இருந்தாலும் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

 

இதையும் படிங்க: முதியவர் தலையில் முளைத்த கொம்பு! வெட்ட வெட்ட திரும்ப வருது.... அதிரவைக்கும் காரணம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#China farmer #சிறுநீர்ப்பை கல் #Bladder Stone #Guangdong hospital #Health News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story