கையில் கத்தியுடன்... மருத்துவர் செய்த அந்த காரியம்! அதிர்விலும் நடுக்கத்திலும் நடந்த அறுவை சிகிச்சை! உலகம் முழுவதும் பாராட்டிய அந்த காட்சி...!!!
ஜப்பானின் குமாமோட்டோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போதும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அமைதியாக அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்த காட்சி உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளது.
ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கையே உலுக்கியது. இருப்பினும் அங்கிருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் பதற்றமடையாமல் நோயாளிகளின் சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொண்டனர். அந்த பரபரப்பான தருணம் பாதுகாப்பு கேமராவில் பதிவாகி தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
அதிர்வுகளுக்கு நடுவிலும் தொடர்ந்த அறுவை சிகிச்சை
கடந்த ஜூலை 28 அன்று யட்சுஷிரோ நகரில் உள்ள குமாமோட்டோ விரிவான மருத்துவமனையில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அறுவை சிகிச்சை அரங்கில் இருந்த மருத்துவ உபகரணங்கள் பலமாக அதிர்ந்து நகர்ந்தன. தகவலின்படி, அப்போது நான்கு அறுவை சிகிச்சைகள் ஒரே நேரத்தில் நடைபெற்று வந்தன. இதையடுத்து மருத்துவர்கள் சிகிச்சைப் பகுதியை பாதுகாப்பாக நிலைநிறுத்தி, செவிலியர்கள் உபகரணங்களை கட்டுப்பாட்டில் வைத்தபடி பணியைத் தொடர்ந்தனர்.
இதையும் படிங்க: நடுரோட்டில் அம்மா அம்மான்னு அழுத குழந்தை… போதையில் சுயநினைவின்றி கிடந்த தாய்! ஓடிவந்து உதவிய பொதுமக்கள்..!!!
மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாவது, நான்கு அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்தன. நோயாளிகளுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. நிலநடுக்கத்தால் மருத்துவமனையின் சில கட்டமைப்புகள் சேதமடைந்ததால் வெளிநோயாளி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஆனால் உள்நோயாளி பராமரிப்பும் அவசர சிகிச்சைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டன. அதன்பின் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5 முதல் வெளிநோயாளி சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டன.
உலகம் முழுவதும் பாராட்டு
பாதுகாப்பு கேமராவில் பதிவான காட்சியில், முதன்மை அறுவை சிகிச்சை நிபுணர் முழு கவனத்துடன் நோயாளியின் சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்வதும், செவிலியர்கள் உடனடியாக கதவுகளைத் திறந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும், மயக்கவியல் நிபுணர் நோயாளியின் சுவாசக் குழாயை உறுதியாகப் பாதுகாப்பதும் இடம்பெற்றுள்ளது. மருத்துவ நிபுணர்கள் இந்த நடவடிக்கைகளை சிறந்த அவசரகால செயல்பாடாக பாராட்டியுள்ளனர். பேரிடர் நேரப் பயிற்சியும் மருத்துவர்கள் கடமையுணர்வும் உயிர்களை பாதுகாப்பதில் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.