×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குப்பையில் தூக்கி வீசப்பட்ட அந்த ஒரு சீட்..! 2 நாட்கள் நடந்த தீவிர தேடல்.... கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி! அமௌன்ட்டை பார்த்தா ஆடிபோயிருவீங்க...!!!

இத்தாலியில் தவறுதலாக குப்பையில் வீசப்பட்ட லாட்டரி சீட்டுக்கு சுமார் ₹11 கோடி பரிசு விழுந்தது. இரண்டு நாட்கள் தேடிய பிறகு அந்த சீட்டை பெண் மீட்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஒரே இரவில் கோடீஸ்வரராக வேண்டும் என்ற ஆசையில் உலகம் முழுவதும் பலர் லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார்கள். ஆனால், தெற்கு இத்தாலியில் ஒரு பெண்ணுக்கு கிடைத்த அனுபவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தவறுதலாக குப்பையில் வீசப்பட்ட லாட்டரி சீட்டு சுமார் ₹11 கோடி மதிப்பிலான மெகா பரிசை வென்றிருந்தது தெரியவந்துள்ளது.

கவனக்குறைவால் குப்பையில் போன சீட்டு

தகவலின்படி, தெற்கு இத்தாலியைச் சேர்ந்த அந்தப் பெண் சமீபத்தில் வாங்கிய லாட்டரி சீட்டை கவனக்குறைவாக மற்ற குப்பைகளுடன் சேர்த்து தூக்கி எறிந்துள்ளார். வழக்கம்போல் தூய்மைப் பணியாளர்கள் குப்பையை அகற்றிச் சென்ற பிறகே, அந்த சீட்டில்தான் பரிசு விழுந்திருப்பது அவருக்கு தெரியவந்தது.

இதையும் படிங்க: ஒரே வீட்டில் 20 வருஷமாக மனைவியிடம் பேசாமல் இருந்த கணவர்! அவர் சொன்ன அந்த ஒரு காரணம்.... நெட்டிசென்கள் அதிர்ச்சி.!!!

இரண்டு நாட்கள் நடந்த தீவிர தேடல்

இதையடுத்து, அவர் உடனடியாக குப்பை மேலாண்மை நிறுவனத்தைத் தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளார். அதன்பின் இரண்டு நாட்கள் தொடர்ந்து தேடுதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இறுதியில் குப்பைக் குவியலில் இருந்து அந்த ₹11 கோடி மதிப்பிலான வெற்றி சீட்டு மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேடுதல் செலவையும் ஏற்ற பெண்

சீட்டை கண்டுபிடிக்கும் பணிக்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக அந்தப் பெண் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடைசியில் தொலைந்ததாக நினைத்த அதிர்ஷ்டம் மீண்டும் கைக்கிடைத்ததால், இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: இனி என்னால் முடியாது.. . மனைவி சொன்ன அந்த ஒரு வார்த்தையால் கணவன் செய்த அட்டூழியம்! கோபத்தை தூண்டும் வைரல் வீடியோ!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Italy Lottery #லாட்டரி சீட்டு #Rs11 Crore #Winning Ticket #Viral News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story