பெரும் அதிர்ச்சி! புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென தீப்பற்றி வெடித்த கார்கோ விமானம்! விமான வெடித்துச் சிதறிய அதிர்ச்சி வீடியோ..!!!
அமெரிக்கா கென்டகி மாநில லூயிஸ்வில்லி விமான நிலையத்தில் யுபிஎஸ் கார்கோ விமானம் தீப்பற்றி வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று பேர் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
அமெரிக்கா கென்டகி மாநிலத்தில் நடந்த விமான விபத்து உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லூயிஸ்வில்லி சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம், விமானப் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
திடீர் தீப்பற்றி வெடித்த கார்கோ விமானம்
லூயிஸ்வில்லி சர்வதேச விமான நிலையத்தில் எரிபொருளுடன் புறப்பட்ட யுபிஎஸ் கார்கோ விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே திடீரென தீப்பற்றியது. வானில் தீ வேகமாகப் பரவியதால், விமானம் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த கட்டிடங்களில் மோதி வெடித்துச் சிதறியது. இந்த பயங்கர வெடிப்பால் விமான நிலையம் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது.
இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி! தரையிறங்கும் போது திடீரென வழுக்கி கடலில் விழுந்த விமானம்! 32 ஆண்டுகள் பழமையானது... விமானம் நொறுங்கிய காட்சி..!
மூன்று பேர் குறித்து விசாரணை
விபத்தில் விமானத்தில் இருந்த மூன்று பேரின் நிலை குறித்த முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இச்சம்பவத்தில் 11 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தீயணைப்பு துறையின் கடும் முயற்சி
விமான நிலையத்தின் அருகில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணி நேர முயற்சியிற்குப் பிறகே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால், விமான நிலைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த லூயிஸ்வில்லி விமான விபத்து அமெரிக்காவில் சமீபகாலத்தில் நிகழ்ந்த மிகப்பெரும் விமான விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சம்பவத்தின் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 36,000 அடி உயரத்தில் நடந்தது என்ன? விமானத்தை தட்டிச் சென்ற மர்ம மோதல்! கண்ணாடி சிதறி பைலட் காயம்! அவசரமாக தரையிறக்கிய விமானம்....