×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாம் வாழ்ந்து வரும் இரண்டாவது வீடான... நாட்டுக்கு செலுத்தும் என் மரியாதை..! தேசியக் கொடி நிறத்தில் புடவை கட்டி 10 கி.மீ ஓடி அசத்திய இந்தியப் பெண்...! வைரலாகும் வீடியோ..!!!

துபாயில் சிவப்பு புடவை அணிந்து 10 கி.மீ. ஓட்டப்பந்தயத்தை முடித்த கேரளாவைச் சேர்ந்த கஞ்சனா நாயரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.

Advertisement

துபாயின் புகழ்பெற்ற ஷேக் சையத் சாலையில் சிவப்பு நிற புடவை அணிந்து 10 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தை வெற்றிகரமாக முடித்த இந்தியப் பெண் கஞ்சனா நாயரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புடவை, பச்சை ரவிக்கை, தலையில் மல்லிகைப்பூ என பாரம்பரிய தோற்றத்தில் ஓடிய அவர், எளிதான 5 கி.மீ. பாதையைத் தவிர்த்து கடினமான 10 கி.மீ. தூரத்தைத் தேர்வு செய்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

புடவையில் 10 கி.மீ. ஓட்டம்.. வைரலான வீடியோ

நவம்பர் 22-ம் தேதி நடைபெற்ற துபாய் ரன் 2026 போட்டியில் 3.1 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இதில் கேரளாவைச் சேர்ந்த கஞ்சனா நாயர், சிவப்பு நிற புடவை மற்றும் பச்சை ரவிக்கை அணிந்து ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசியக் கொடியின் நிறங்களை பிரதிபலிக்கும் வகையில் தனது உடையைத் தேர்வு செய்த அவர், 10 கிலோமீட்டர் தூரத்தை முழுமையாக ஓடி முடித்தார்.

இதையும் படிங்க: அந்த பொண்ணால முண்ட கூட முடியல..! கழுத்தை நெரித்து, பாறாங்கல்லால் தலையில் அடித்துக் கொல்ல முயன்ற கொடூரன்..! இறுதியில் நடந்த பெரிய ட்விஸ்ட்.....பகீர் காட்சி!!!

அமீரகத்தின் 55-வது தேசிய தினத்தை முன்னிட்டு அந்த நாட்டிற்கு மரியாதை செலுத்தும் வகையிலும், கடந்த 14 ஆண்டுகளாக தாம் வாழ்ந்து வரும் அமீரகத்தை இரண்டாவது வீடாகக் கருதுவதாலும் இந்த உடையைத் தேர்வு செய்ததாக கூறியுள்ளார். வழியில் பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவரது ஓட்டப்பந்தய வீடியோ 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சைக்கிளிலும் புடவையில் அசத்திய கஞ்சனா

ஓட்டப்பந்தயத்தில் மட்டுமல்ல, சைக்கிள் ஓட்டுவதிலும் புடவையுடன் கஞ்சனா அசத்தியுள்ளார். நவம்பர் 1-ம் தேதி கேரளப் பிறவி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற துபாய் ரைடு நிகழ்வில், கேரளப் புடவை அணிந்து சைக்கிள் ஓட்டினார். 2000-ம் ஆண்டு பள்ளிப் படிப்புக்குப் பிறகு சைக்கிள் ஓட்டாத அவர், போட்டிக்கு முந்தைய நாள் இரவுதான் இளஞ்சிவப்பு நிற சைக்கிளை வாங்கியுள்ளார்.

அதன்பிறகு கட்டடத்திற்குள் சிறிது பயிற்சி செய்துவிட்டு மறுநாள் ஷேக் சையத் சாலையில் சைக்கிள் ஓட்டியுள்ளார். புடவையில் சைக்கிள் ஓட்டிய அவரது வீடியோவும் 4.3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகும் சவாலான பாதையில் நம்பிக்கையுடன் சைக்கிள் ஓட்டிய அவரது முயற்சி பலரது கவனத்தை ஈர்த்தது.

14 ஆண்டுகளாக துபாயில் வசிக்கும் இந்தியப் பெண்

கஞ்சனா நாயர் கடந்த 14 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஜ்மானில் சொந்தமாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கிய அவர், நீண்ட காலமாக ஓட்டப் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அரை மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள அவர், இதுவரை ஐந்து முறை துபாய் ரன் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

https://www.instagram.com/reel/DfPbFwEIUXr/?utm_source=ig_web_button_share_sheet

புடவை அணிந்தபடியே ஓட்டப்பந்தயத்தையும் சைக்கிள் பயணத்தையும் மேற்கொண்ட அவரது உடற்தகுதி மற்றும் தன்னம்பிக்கையை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர். புடவை அணிவது உடற்பயிற்சிக்கு தடையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை கஞ்சனா தனது முயற்சியின் மூலம் காட்டியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: சிசிடிவியிலும் சிக்காத மர்ம காட்சி...? ஸ்கர்ட், ஹை ஹீல்ஸ் அணிந்து ரயில் ஓட்டுநர் அறைக் கதவில் வித்தியாசமாக தொங்கிய இளம்பெண்..! பின்னணி என்ன..? திக் திக் காட்சி..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கஞ்சனா நாயர் #Dubai Run 2026 #புடவையில் ஓட்டம் #viral video #துபாய்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story