சிசிடிவியிலும் சிக்காத மர்ம காட்சி...? ஸ்கர்ட், ஹை ஹீல்ஸ் அணிந்து ரயில் ஓட்டுநர் அறைக் கதவில் வித்தியாசமாக தொங்கிய இளம்பெண்..! பின்னணி என்ன..? திக் திக் காட்சி..!!!
மும்பை கோரேகாவ் ரயில் நிலைய மோட்டார்மேன் அறைக்குள் பெண் நுழைய முயன்றதாக வைரல் வீடியோ பரவுகிறது. ஆனால், அங்கு சம்பவம் நடந்ததற்கான பதிவுகள் இல்லை என RPF தெரிவித்துள்ளது.
மும்பை புறநகர் ரயிலின் மோட்டார்மேன் அறைக்குள் பெண் ஒருவர் நுழைய முயல்வது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோரேகாவ் ரயில் நிலையத்தில் இந்தக் காட்சி நடந்ததாகப் பதிவுகள் பகிரப்பட்ட நிலையில், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) விசாரணையில் அங்கு இதுபோன்ற சம்பவம் நடந்ததற்கான ஆதாரம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. வைரல் காணொளியின் பின்னணி மற்றும் அது எங்கு எடுக்கப்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை.
மோட்டார்மேன் அறைக்குள் நுழைய முயன்ற பெண்
வைரலாகும் காணொளியில், இளம் பெண் ஒருவர் மோட்டார்மேன் அறையின் கதவுப் பிடியை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு பின்னோக்கி வளைந்து உள்ளே நுழைய முயல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஸ்கர்ட் மற்றும் ஹை ஹீல்ஸ் அணிந்துள்ள அந்தப் பெண், ரயில்வே ஊழியர்கள் மட்டுமே அணுகக்கூடிய அறையின் கதவு அருகே வித்தியாசமாக நடந்துகொள்வது தெரிகிறது.
இதையும் படிங்க: பார்க்கும்போதே பக்குபக்குன்னு இருக்கே...! தண்ணீருக்குள் இருந்த முதலை திடீரென எகிறிய காட்சி..! ஒரு நொடியில் மிஸ் ஆகிட்டாரு... திகில் வீடியோ..!!!
அந்தப் பெண் போதையில் இருந்ததாகவும் சில பதிவுகளில் கூறப்பட்டாலும், வீடியோவை மட்டும் வைத்து அவரது நிலையை உறுதிப்படுத்த முடியவில்லை.
கோரேகாவ் நிலையத்தில் நடந்ததாக பதிவில்லை என RPF விசாரணை
நவம்பர் 16-ம் தேதி இரவு சுமார் 11.40 மணியளவில் இன்ஸ்டாகிராம் மூலம் புகார் கிடைத்ததைத் தொடர்ந்து, RPF அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். ஏஎஸ்ஐ சுபாஷ் யாதவ் மற்றும் தலைமைக் காவலர் விநாயக் கோரே ஆகியோர் கோரேகாவ் நிலைய மேலாளர் மற்றும் ரயில்வே காவல்துறையினருடன் இணைந்து விசாரித்தனர்.
அப்போது, காணொளியில் காட்டப்படும் வகையிலான சம்பவம் குறித்து மோட்டார்மேன் அல்லது கார்டு யாரும் புகார் அளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. பிற்பகல் மற்றும் இரவு நேரப் பணிகளில் இருந்த ரயில்வே ஊழியர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சிசிடிவி காட்சிகளிலும் சம்பவம் பதிவாகவில்லை
கோரேகாவ் ரயில் நிலையத்தின் நடைமேடை 1 மற்றும் 2-ன் வடக்கு, தெற்கு முனைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் RPF அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால், அந்த நிலையத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்ததற்கான காட்சிகள் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், வைரலாகும் காணொளி கோரேகாவ் நிலையத்தில் எடுக்கப்பட்டதா அல்லது வேறு ரயில் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதையும் படிங்க: இரவு நேரத்தில் வானில் பறந்த மர்ம உருவம்..! மிரண்டு போன மக்கள்.... இறுதியில் வெளிவந்த பகீர் பின்னணி.! வைரல் வீடியோ..!!!