பயமா இருக்குன்னு தெரிஞ்சும்... தப்பு பண்ணிட்டியேமா! டிக்டாக் லைவ் வீடியோவில் பேசிக்கொண்டிருந்த14 வயது சிறுமி! 6 வது மாடியிலிருந்து தவறி விழுந்து பலி.... அதிர்ச்சி காட்சி..!!!
ஜப்பானில் டிக்டாக் நேரலை செய்துகொண்டிருந்த 14 வயது பள்ளி மாணவி, அடுக்குமாடிக் குடியிருப்பின் 6-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். நேரலையில் பதிவான காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஜப்பானில் டிக்டாக் நேரலை செய்துகொண்டிருந்த 14 வயது பள்ளி மாணவி, அடுக்குமாடிக் குடியிருப்பின் 6-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். ருகா என அடையாளம் காணப்பட்ட அந்தச் சிறுமி, வீட்டின் பால்கனி கைப்பிடிச் சுவரில் அமர்ந்தபடி நேரலை செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். நேரலையில் பதிவான காட்சிகள் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கைப்பிடிச் சுவரில் அமர்ந்தபோது நேர்ந்த விபரீதம்
சம்பவத்தன்று ருகா தனது வீட்டின் பால்கனியில் இருந்த கைப்பிடிச் சுவரில் அமர்ந்தபடி டிக்டாக்கில் நேரலை செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி பின்னோக்கிச் சாய்ந்த அவர், கீழே விழாமல் இருக்கச் சுவரைப் பிடித்துக்கொண்டார். சில விநாடிகள் தொங்கியபடி தப்பிக்க முயன்றும், இறுதியில் பிடி நழுவி ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்தார்.
இதையும் படிங்க: ஜிம்மில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! திடீரென 3-வது மாடியில் இருந்து விழுந்து பலி.... குலை நடுங்க வைக்கும் காட்சி..!!!
அவர் நேரலை செய்துகொண்டிருந்ததால், கீழே விழுந்த காட்சிகள் முழுவதும் கேமராவில் பதிவாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த நண்பர்களும் பின்தொடர்பவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
நேரலையில் பயத்தை வெளிப்படுத்திய சிறுமி
நேரலையின்போது, தனக்குப் பசிப்பதாகவும் பயமாக இருப்பதாகவும், தான் செய்வது ஆபத்தானது என்றும் ருகா திரும்பத் திரும்பக் கூறியதாகச் சில பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர் ஏன் கைப்பிடிச் சுவரில் அமர்ந்திருந்தார் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக வெளியாகவில்லை.
காவல்துறை தீவிர விசாரணை
கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த ருகா உயிரிழந்தார். இதையடுத்து, ஜப்பானியக் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி சமீபகாலமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதற்கும் விபத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
சமூக வலைதளங்களில் நேரலை செய்யும்போது ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: ஐயோ... 11 மாதக் குழந்தையை உயிருடன் காட்டுக்குள் புதைத்த தந்தை! 100 போலீஸார் தேடுதல் வேட்டை... இறுதியில் நடந்த அதிசயம்! பகீர் சம்பவம்...!!!