ஐயோ... 11 மாதக் குழந்தையை உயிருடன் காட்டுக்குள் புதைத்த தந்தை! 100 போலீஸார் தேடுதல் வேட்டை... இறுதியில் நடந்த அதிசயம்! பகீர் சம்பவம்...!!!
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் 11 மாதக் குழந்தையை நாய் கூண்டுக்குள் அடைத்து மண்ணில் புதைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். 100-க்கும் மேற்பட்ட போலீசார் தேடியதில் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் 11 மாதக் குழந்தையை நாய் அடைக்கும் கூண்டுக்குள் வைத்து மண்ணில் புதைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 25 வயது மைக்கேல் கோமரே என்பவர் குழந்தையுடன் மாயமான நிலையில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் நடத்திய தேடுதலில் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. தற்போது குழந்தை நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையுடன் மாயமான இளைஞர்
தெற்கு கரோலினாவின் லெக்சிங்டன் நகரில் மைக்கேல் கோமரே தனது 11 மாதக் குழந்தை மற்றும் குழந்தையின் பாட்டியுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று பாட்டி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, குழந்தையையும் மைக்கேலையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். கடந்த திங்கள்கிழமை இரவு ஒரு கட்டிடத்தில் வைத்து மைக்கேல் கைது செய்யப்பட்டார். ஆனால், அவருடன் குழந்தை இல்லை. இதனால் குழந்தையின் நிலை குறித்து சந்தேகம் அதிகரித்தது.
மண்ணுக்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்
செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 1.30 மணியளவில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் வீட்டைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் தேடுதல் நடத்தினர். அப்போது வீட்டிலிருந்து சுமார் 50 கெஜம் தொலைவில் ஒரு இடத்தில் மண் தளர்வாக இருந்ததையும், அதன் மீது பைன் மர இலைகள் கிடந்ததையும் கவனித்தனர்.
சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது, உள்ளிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. தொடர்ந்து மண்ணை அகற்றியதில், நாய் அடைக்கும் கூண்டுக்குள் குழந்தை அடைக்கப்பட்டு சுமார் ஒரு அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாகக் குழந்தையை மீட்ட போலீசார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். கூண்டைச் சுற்றியிருந்த துணி மற்றும் குளிர்ந்த இரவு நேரக் காற்று குழந்தை சுவாசிக்க உதவியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை நலம்; இளைஞருக்கு ஜாமீன் மறுப்பு
மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தை நலமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தையின் தாயுடன் மைக்கேலுக்கு சில பிரச்சினைகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதுவே குழந்தையைப் புதைத்ததற்கான காரணமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. விசாரணையின்போது மைக்கேல் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பார்க்கும்போதே பக்குபக்குன்னு இருக்கே...! தண்ணீருக்குள் இருந்த முதலை திடீரென எகிறிய காட்சி..! ஒரு நொடியில் மிஸ் ஆகிட்டாரு... திகில் வீடியோ..!!!