அரக்கன்.... படிக்கட்டில் விழுந்து துடித்த மனைவி! ஆனால் அந்த கல் நெஞ்சக்காரன் செஞ்ச வேலையை பாருங்க...! நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!!
பாரமான பைகளை சுமந்தபடி படிக்கட்டில் ஏறிய பெண் நிலைதடுமாறி விழுந்த வீடியோ வைரலாகியுள்ளது. கணவரின் அலட்சியமான நடத்தை குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பாரமான பைகளை சுமந்தபடி படிக்கட்டுகளில் ஏறிச் சென்ற பெண் ஒருவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதைவிட அதிக கவனத்தை ஈர்த்திருப்பது, அருகில் வந்த அவரது கணவரின் செயல்பாடுதான். வீடியோவை பார்த்த பலரும் அவரது அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
படிக்கட்டில் சரிந்து விழுந்த பெண்
வைரலாகி வரும் காட்சிகளில், அதிக எடையுள்ள பைகளைத் தூக்கிக்கொண்டு ஒரு பெண் படிக்கட்டுகளில் ஏறிச் செல்கிறார். சுமையைத் தாங்க முடியாமல் சில படிகள் ஏறியவுடன் அவர் திடீரென சமநிலையை இழந்து படிக்கட்டுகளிலேயே சுருண்டு விழுகிறார். இதனால் வலியால் அவதிப்பட்டபடி அங்கேயே கிடப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
கணவரின் நடவடிக்கை சர்ச்சை
அதன்பின் சில நொடிகளில் அங்கு வரும் அவரது கணவர், கீழே விழுந்து கிடக்கும் மனைவியை உடனடியாக கவனிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தனது கையில் இருந்த பொருட்களை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கணவர் அலட்சியம் என பலர் இந்த நடத்தையை விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐயோ.... வலிக்குது... தயவு செய்து விட்டுடுங்க! பயிற்சியில் கதறி துடித்த மாணவி.... கண்டுக்கொள்ளாத ஆசிரியர்.! வைரல் வீடியோவால் வெடித்த விவாதம்..!!!
சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினை
இந்த வைரல் வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். திருமண உறவு என்பது அன்பு, அக்கறை மற்றும் பொறுப்புணர்வின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும், அவசர நேரத்தில் துணைக்கு உதவுவது முதன்மையான கடமை என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், ஒரு குறுகிய வீடியோவை மட்டும் வைத்து முழு சூழ்நிலையையும் தீர்மானிக்க முடியாது என்று சிலர் எச்சரித்தாலும், வீடியோவில் பதிவான காட்சிகள் பெரும்பாலான இணையவாசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.