×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜிம் பிரியர்களே.. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. மறந்தும் செய்யக்கூடிய தவறுகளும், ஸ்மார்ட் டிப்ஸ்.!

தீவிர உடற்பயிற்சிக்குப்பின் பசி அதிகம் எடுக்கும் என்பதால், தசை வலிமையை உறுதி செய்ய நாம் சில உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Advertisement

உடற்பயிற்சி செய்பவர்களுக்கான டிப்ஸ் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

தேர்வு முக்கியம்:

நமது உடலை கட்டுக்கோப்புடன் வைக்கவும், உடல் ஆரோக்கியத்துக்காகவும் உடற்பயிற்சி செய்வது வழக்கம். உடற்பயிற்சி செய்து முடித்ததும் பசி அதிகம் எடுக்கும். இந்த நேரத்தில் நாம் கொழுப்புசத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடற்பயிற்சி செய்ததில் பலன் இல்லை. உடல் புத்துணர்ச்சி & புரதசத்து கேட்டு உணவின் மீதான ஆசையை அதிகரிக்கும். இந்த சமயத்தில் நாம் உணவை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: இரவு உணவு பழக்கம் இப்படித்தான் இருக்க வேண்டும்.. சூப்பர் டிப்ஸ் இதோ.!

சிற்றுண்டி:

உடல் ஆரோக்கியம் மேம்பட, மனஅழுத்தம் குறைய உடற்பயிற்சி செய்ய நினைப்பவர்கள் காலையில் அதனை மேற்கொள்ளலாம். இரவு நேரத்தில் விழித்திருக்கும் நபர்கள் மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நல்லது. அதேபோல, உடற்பயிற்சி செய்தபின் சிற்றுண்டியை ஆரோக்கியமான வகையில் தேர்வு செய்து எடுக்க வேண்டும். அதாவது, உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் வாழைப்பழம், நீண்ட நேரம் ஆற்றல் தரும் ஓட்ஸ், ஆப்பிளுடன் வேர்க்கடலை வெண்ணெய், நீரேற்றத்தை தரும் மோர் & இளநீர் சாப்பிடலாம்.

நீரேற்றம்:

அதேபோல, உடற்பயிற்சிக்குப்பின் சுமார் 30 நிமிடங்களுக்குள் சாப்பிடுவது இழந்த ஆற்றலை மீட்க உதவும். தசையை வலுப்படுத்த, தசை வளர்ச்சிக்கு முட்டை, தயிர், பாதம், உலர் திராட்சை சாப்பிடலாம். பன்னீர், முளைகட்டிய பயறு, சுண்டல் வகையையும் சாப்பிடலாம். உடற்பயிற்சிக்கு முன்பும், பின்பும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது நல்லது. அதிக கொழுப்பு & சர்க்கரை உணவுகள் வேண்டாம்.

இதையும் படிங்க: கோடையில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்.. இதையெல்லாம் தப்பித்தவறியும் சாப்பிடாதீங்க.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #gym workout #Nutrition Tips #ஜிம் டயட்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story