×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனிதர்களின் ஆசைக்கு அளவே இல்லல்ல! ஆனா இந்த பிஞ்சு குழந்தையை பாருங்க.... கால், கை இல்லாமல் தந்தையை கண்டதும் உருண்டு வந்து.... கல் நெஞ்சும் கரையும் காட்சி!!!

இரண்டு கால்களும் ஒரு கையும் இல்லாத பிஞ்சு மகனுடன் தந்தை விளையாடும் பாசமான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி, பலரையும் நெகிழச் செய்துள்ளது.

Advertisement

 

இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள தந்தை, மகனின் பாசத்தை வெளிப்படுத்தும் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இரண்டு கால்களும் ஒரு கையும் இல்லாத பிஞ்சு குழந்தை, தனது தந்தையைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் அவரை நோக்கி நகர்கிறது. இருவருக்கும் இடையேயான அன்பை வெளிப்படுத்தும் இந்தக் காட்சிக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

வீடியோவில், வீட்டின் கதவுக்குப் பின்னால் தந்தை நிற்க, தரையில் படுத்திருக்கும் குழந்தை அவருடன் விளையாடுகிறது. தந்தை வந்திருப்பதை அறிந்ததும், ஒரே கையைப் பயன்படுத்தி தரையில் உருண்டபடி கதவை நோக்கி குழந்தை உற்சாகமாக செல்கிறது. மழலைக் குரலில் தந்தையை அழைத்தபடி அது காட்டும் மகிழ்ச்சி காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதையும் படிங்க: வெள்ளத்துக்கு நடுவே குடும்பத்தைக் காப்பாற்ற ஓடிய வாலிபர்! திக் திக் காட்சி..!!!

கதவை திறக்காமல் தந்தை செய்த குறும்பு

மகன் தன்னை நோக்கி வருவதை பார்த்த தந்தை, உடனே கதவைத் திறக்காமல் சிறிது நேரம் குறும்பாக விளையாடுகிறார். இதனால் குழந்தையின் உற்சாகம் மேலும் அதிகரிக்கிறது. பின்னர் கதவைத் திறந்து குனிந்த தந்தை, தனது மகனை அன்புடன் தூக்கி அணைத்துக் கொள்கிறார். அந்த நேரத்தில் குழந்தையின் முகத்தில் தெரியும் புன்னகைதான் வீடியோவின் முக்கிய காட்சியாக அமைந்துள்ளது.

கோடிக்கணக்கான பார்வைகளை கடந்த வீடியோ

இந்த வைரல் வீடியோ இதுவரை 17.6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. மேலும், 1.5 கோடிக்கும் அதிகமான லைக்குகளும் குவிந்துள்ளன. 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கருத்துகளை பதிவிட்டு, குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்த இணையவாசிகள்

வீடியோவை பார்த்த பலரும் தங்களது உணர்வுகளை கருத்துகளாக பகிர்ந்து வருகின்றனர். ஒரு பயனர், இந்தக் காட்சியை பார்த்து உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை என்றும், அந்தக் குடும்பத்தை கடவுள் காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மற்றொருவர், வாழ்க்கையில் குறைகள் குறித்து நாம் அடிக்கடி வருத்தப்படும் நிலையில், இந்தக் குழந்தையின் சிரிப்பு உண்மையான மகிழ்ச்சியை நினைவூட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். தந்தை மற்றும் மகனின் பாசம் இணையவாசிகளின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

 

இதையும் படிங்க: தங்கச் சிலையை கண்டு பச்சிளம் சிறுவன் கொடுத்த முத்தம்! அடுத்த நொடி அந்த கலைஞர் செய்த காரியம்..! குதூகலமான சிறுவன்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தந்தை மகன் பாசம் #Instagram viral #வைரல் வீடியோ #Father Son Love #குழந்தை வீடியோ
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story