×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டிற்குள் நுழைந்த மைத்துனர்.! அடுத்த நொடியே கணவனை இழந்த மனைவிக்கு நடந்த அதிர்ச்சி! பகீர் சம்பவம்..!!!

டெல்லி பவானாவில் இளைஞருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த அண்ணியை மைத்துனர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். 5 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

டெல்லி பவானா பகுதியில் கணவனை இழந்த பெண் ஒருவர், இளைஞருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த மைத்துனரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். மனிஷா தாபாஸ் (38) என்பவரை விக்கி தாபர் என்பவர் சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை நடந்த 5 மணி நேரத்திற்குள் அவரை போலீசார் கைது செய்தனர்.

இளைஞர் வீட்டுக்கு வந்து சென்றதால் ஏற்பட்ட சந்தேகம்

பவானா பகுதியில் வசித்து வந்த மனிஷாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது வீட்டிற்கு இளைஞர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு மனிஷாவின் மைத்துனரான விக்கி தாபர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: நாங்க போலீஸ்... சொல்றத மட்டும் தான் கேக்கனும்! 17 வயது சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்! பகீர் சம்பவம்...!!!

மனிஷாவுக்கும் அந்த இளைஞருக்கும் காதல் தொடர்பு இருப்பதாக விக்கி சந்தேகித்துள்ளார். இதுதொடர்பாக குடும்பத்தினரிடையே ஏற்கனவே பஞ்சாயத்து நடத்தப்பட்டு, இருவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு

இந்நிலையில், நேற்று காலை அந்த இளைஞர் மனிஷாவின் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த விக்கி, அவரை பார்த்ததும் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற அவர், மனிஷாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் படுகாயமடைந்த மனிஷா உயிரிழந்தார்.

5 மணி நேரத்தில் சிக்கிய குற்றவாளி

தகவல் கிடைத்ததும் டெல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர். தனிப்படை அமைத்து விக்கியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து, கொலை நடந்த சுமார் 5 மணி நேரத்திற்குள் விக்கி தாபரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மனிஷாவை கொலை செய்ததற்கான காரணம், துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: என்னம்மா ஆச்சு உனக்கு? அதி வேகமாக செல்லும் வாகனங்களுக்கு நடுவே... நடுரோட்டில் படுத்து கதறி அழுத இளம்பெண்..! சக வாகன ஓட்டிகள் செய்த அந்த ஒரு காரியம்.. வைரல் வீடியோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#டெல்லி கொலை #மனிஷா தாபாஸ் #விக்கி தாபர் #Delhi police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story