×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னம்மா ஆச்சு உனக்கு? அதி வேகமாக செல்லும் வாகனங்களுக்கு நடுவே... நடுரோட்டில் படுத்து கதறி அழுத இளம்பெண்..! சக வாகன ஓட்டிகள் செய்த அந்த ஒரு காரியம்.. வைரல் வீடியோ..!!!

கிழக்கு ஜாவாவின் சிடோவார்கோவில் காதல் பிரிவால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் நடுரோட்டில் கதறி அழுதார். பொதுமக்கள் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் சிடோவார்கோ பகுதியில், இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது. பலூர் சாலையில் நேற்று காலை நடந்த இந்த நிகழ்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். போக்குவரத்துக்கு மத்தியில் அவர் சாலையில் அமர்ந்திருந்ததால், விபத்து ஏற்படும் அபாயமும் உருவானது.

நடுரோட்டில் கதறிய இளம்பெண்

சாலையில் வேகமாக வாகனங்கள் சென்றுகொண்டிருந்த நிலையில், அந்தப் பெண் சுயநினைவை இழந்தது போல் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தார். அவருக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டிருந்ததாக தெரிகிறது. காதல் உறவில் ஏற்பட்ட பிரிவே இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், இதுகுறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: ஐயோ... காப்பாத்துங்க! ஹோட்டலின் 6-வது மாடியில் இருந்து நொடிப்பொழுத்தில் கார் மீது விழுந்த பெண்! நெஞ்சை பதறவைக்கும் காட்சி..!!!

வாகன ஓட்டிகள் உடனடி நடவடிக்கை

நிலைமையை கவனித்த சக வாகன ஓட்டிகளும் அப்பகுதி பொதுமக்களும் உடனடியாக அங்கு திரண்டனர். சாலையில் தொடர்ந்து அமர்ந்திருந்ததால் அசம்பாவிதம் நேரிடக்கூடும் என்பதை உணர்ந்த அவர்கள், அந்தப் பெண்ணை பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் போக்குவரத்துக்கு ஏற்பட்ட இடையூறும் தவிர்க்கப்பட்டது.

குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைப்பு

சாலையோரத்தில் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளம்பெண்ணுக்கு முதலுதவி வழங்கப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தினர் வந்தபின், அந்தப் பெண் பத்திரமாக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது அவர் குடும்பத்தினரின் பாதுகாப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: 2 ஆண்டுகளாக தேடியும் சடலம் கிடைக்கல...! ஆனால் கணவன் தான் கொலையாளி..? குழந்தை நல செவிலியரின் மர்ம மரணம் .... வெளிவந்த அதிர்ச்சி பின்னணி..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#சிடோவார்கோ #East Java #இளம்பெண் #காதல் பிரிவு #Sidoarjo viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story