அந்த விஷயத்தில் மறுத்த காதலன்! அடுத்த நொடி ஆணுறுப்பை அறுத்தெறிந்த கொடூர காதலி.... போலீசாரிடம் பெண் அளித்த பகீர் வாக்குமூலம்...!!!
அமெரிக்காவின் கொலராடோவில் காதலனை கத்தியால் தாக்கி கொன்றதாக பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கர்ப்பம் தொடர்பான வாக்குவாதமே கொலைக்கு காரணம் என விசாரணையில் தகவல்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஹோட்டலில் 38 வயது டஸ்டின் நால்ஸ் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது காதலி 34 வயது ஷென்டிங் குவோ கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 2024-ல் நடந்த இந்த கொலையில், நால்ஸை கத்தியால் தாக்கி கொன்றதாக குவோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவலறிந்து வந்த மருத்துவப் பணியாளர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.
கர்ப்பம் குறித்து ஏற்பட்ட வாக்குவாதம்
விசாரணையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கர்ப்பம் தொடர்பான வாக்குவாதம் கொலைக்கு முக்கிய காரணமாக இருந்ததாக தெரியவந்துள்ளது. தான் கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தைக்கு நால்ஸ்தான் தந்தை என்றும் குவோ கூறியதாகவும், அதை நால்ஸ் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த குவோ, நால்ஸின் காலில் கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் அவர் உண்மையிலேயே மயங்கிவிட்டாரா என்பதை சோதிப்பதற்காக உடலில் மேலும் கொடூரமாக தாக்கியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஆணுறுப்பை துண்டித்து குப்பைத் தொட்டியில் வீசியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
முதலுதவி செய்ய முயன்ற காதலி
தாக்குதலுக்குப் பிறகு குவோ ஹோட்டலை விட்டு வெளியே சென்று சில மருந்துகளை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் நால்ஸுக்கு முதலுதவி செய்ய முயன்றுள்ளார். ஆனால் அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை. மருத்துவப் பணியாளர்கள் வந்து பரிசோதித்தபோது நால்ஸ் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
பல பிரிவுகளில் வழக்குப்பதிவு
தற்போது மேசா கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள குவோ மீது, கவனக்குறைவாக மரணத்தை ஏற்படுத்துதல், சடலத்தை அவமதித்தல், கொடூரமான காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நால்ஸை கொல்லும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், கடும் கோபத்தின் காரணமாகவே தாக்குதல் நடத்தியதாகவும் குவோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மனநலப் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மனுஷங்களா நீங்களாம்.? வெள்ளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் காதிலிருந்து கழட்டிய தோடு, தங்க நகைகள்! கொடூர வீடியோ...!!!