பூனைக்கு வந்த வாழ்வை பார்த்தீங்களா! செல்லப் பூனையை பத்திரமா பார்த்துக்கிட்டா கிடைக்கும் மிகப்பெரிய அதிஷ்டம்! உரிமையாளரின் அசத்தல் அறிவிப்பு...
சீனாவை சேர்ந்த லாங் என்ற முதியவர் தனது இறப்பிற்குப் பின் பூனையை பராமரிக்க விரும்புபவருக்கு முழு சொத்தையும் வழங்க விரும்புவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த 82 வயதான லாங் என்ற முதியவர் தனது மரணத்திற்கு பிறகு தன் செல்லப்பூனைக்கு பாதுகாப்பாக இருப்பதற்காக, அதனை பராமரிக்க விரும்புபவருக்கு முழு சொத்துக்களையும் அளிக்க திட்டமிட்டுள்ளார். இந்த அறிவிப்பே சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது வாழ்க்கையின் முக்கியமான பகுதியாக பூனையை கருதும் லாங், அதற்காக எந்த சிரமத்தையும் மேற்கொள்ள தயாராக உள்ளார். பூனை மீது காட்டிய பாசம், அவரது சொத்து முடிவிலும் தெளிவாக தெரிகிறது.
தனிமையில் தோன்றிய பாசம்
தனது மனைவியை இழந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு, தனிமையை தவிர்க்க தெருவில் இருந்த 4 பூனைகளை வீட்டுக்குள் அழைத்து வளர்க்க ஆரம்பித்தார். அந்த 4 பூனைகளில் தற்போது 'சியான்பா' என்ற பூனை மட்டுமே அவருடன் இருக்கிறது.
பூனைக்கான பாதுகாப்பான எதிர்காலம்
சியான்பா என்ற பூனை அவரது வாழ்க்கையின் ஓர் முக்கிய அங்கமாக மாறியதால், அவரது இறப்பிற்குப் பிறகும் அதனை பாதுகாப்பாக பராமரிக்க ஒருவரை தேடுகிறார். பூனை பராமரிப்புக்கு தயாராக உள்ள நபருக்கு, தனது வீடும், சேமிக்கப்பட்ட பணமும் உள்ளிட்ட சொத்துக்களை வழங்குவதாகக் கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு
இந்த செயல் மனித பாசத்தின் ஒரு அழகான எடுத்துக்காட்டு என்றும், ஒரு பூனைக்காக சொத்தை எழுதிய முதியவரின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் பெருகுகின்றன.
இதையும் படிங்க: உலகத்தை வியக்கவைத்த ஜப்பான் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு! எல்லா ரத்த வகைக்கும் பொருந்தும் செயற்கை ரத்தம்! மருத்துவ உலகின் சாதனை!