இப்படி ஒரு சித்திரவதையா? பள்ளியின் பூட்டப்பட்ட கழிப்பறையில் கேட்ட முனுகல் சத்தம்! கதவை உடைத்த தொழிலாலர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... வெளிவந்த அதிர்ச்சி பின்னணி!!!!
வங்கதேசத்தின் குல்னாவில் பள்ளி மாணவி கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தின் குல்னா மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். சையத் நைமுதீன் மேல்நிலைப் பள்ளி கழிப்பறையில் இருந்து அழுகை சத்தம் கேட்டதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கதவை உடைத்து அவரை மீட்டனர். தற்போது குல்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பூட்டப்பட்ட கழிப்பறையில் இருந்து கேட்ட அழுகை சத்தம்
குல்னா மாவட்டம் திகாலியா உபாசிலாவில் உள்ள காசிர்காட் பகுதியில் இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நந்திதா ராய் என்ற மாணவி படித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 8 மணியளவில் பள்ளியின் பூட்டப்பட்ட கழிப்பறைக்குள் இருந்து அழுகை மற்றும் முனகல் சத்தம் கேட்டுள்ளது.
இதையும் படிங்க: மனசு எப்படி வலிச்சுருக்கும்...! எதிர்பார்ப்புடன் வீடு திரும்பிய மகளுக்கு கிடைத்த பேரதிர்ச்சி! நெஞ்சை உலுக்கும் காட்சி..!!!
இதையடுத்து அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் கழிப்பறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மாணவி கைகள், கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு முதலுதவி அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக குல்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி முடிந்ததும் நடந்ததாக தாய் தகவல்
மாணவியின் தாய் சிமுல் ராய் அளித்த தகவலின்படி, பள்ளி அன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் முடிந்துள்ளது. பள்ளி முடிந்த பிறகு நந்திதா கழிப்பறைக்குச் சென்றபோது, மர்ம நபர் ஒருவர் பின்பக்கமாக இருந்து அவரது தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் மயங்கி விழுந்ததாகவும், பின்னர் அவரது கை, கால்கள் மற்றும் வாயை கட்டியதாகவும் தாய் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதாகவும், உடலின் பல்வேறு பகுதிகளில் பிளேடால் வெட்டப்பட்ட காயங்கள் இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது உடலில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவி தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகளை கண்டறிய கோரிக்கை
மாணவி தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாக்கியவர்கள் யார், எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. குற்றவாளிகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் குடும்பத்தினரும் உள்ளூர் மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காதலுக்கு வயது தடையில்லை? 72 வயதில் 20 வயது பெண்ணை கரம் பிடித்த கால்பந்து ஜாம்பவான்!