காதலுக்கு வயது தடையில்லை? 72 வயதில் 20 வயது பெண்ணை கரம் பிடித்த கால்பந்து ஜாம்பவான்!
காதலுக்கு வயது தடையில்லை? 72 வயதில் 20 வயது பெண்ணை கரம் பிடித்த கால்பந்து ஜாம்பவான்!
மலேசியாவின் முன்னாள் தேசிய கால்பந்து வீரரான டத்தோக் அப்தா அலிப், தனது 72-வது வயதில் 20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தத் திருமணம் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடைபெற்றதாக அவரது சகோதரரும் முன்னாள் தேசிய கால்பந்து வீரருமான டத்தோக் யூனுஸ் அலிப் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையே 52 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ள நிலையில், இந்தத் திருமணம் இரு குடும்பத்தினரின் முழுமையான சம்மதம் மற்றும் ஆசீர்வாதத்துடன் நடைபெற்றதாக யூனுஸ் அலிப் தெரிவித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு இருவரும் மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கையைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அப்தா அலிப், 1970 மற்றும் 1980-களில் மலேசிய கால்பந்து அணியின் முக்கிய வீரராக விளங்கியவர். குறிப்பாக, 1980 மாஸ்கோ ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் தென் கொரியாவுக்கு எதிரான 2-1 வெற்றியைப் பெற்ற மலேசிய அணியில் அவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மயக்க மருந்து ஒழுங்கா வேலை செய்யல போல....! திடீரென கண்விழித்து கூண்டை உடைத்து வனக் காவலரைத் தாக்கிய சிறுத்தை...! நடுங்கவைக்கும் காட்சி...!!!
திருமணத்துக்குப் பிறகு அப்தா அலிப் தனது இளம் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 72 வயதில் 20 வயது பெண்ணை முன்னாள் கால்பந்து ஜாம்பவான் திருமணம் செய்துகொண்ட சம்பவம் தற்போது மலேசியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: “வீட்டில் மாட்டிறைச்சி சமைக்கக் கூடாது!”.. வாடகைதாரருடன் மோதல்.. கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் கைது!