கடவுளே! சாமி கும்பிட்டும்போதே இப்படி ஒரு சோதனையா? கோயிலுக்குள் அதிவேகத்தில் புகுந்த எலக்ட்ரிக் கார்...! அலறியடித்து ஓடிய மக்கள்... அதிர்ச்சி காட்சி..!!!
பாங்காக் சைனாடவுனில் உள்ள குவான்யின் ஆலயத்திற்குள் எலக்ட்ரிக் கார் புகுந்து 3 பேர் காயமடைந்தனர். முதிய ஓட்டுநர் மயங்கியதே காரணம் என தகவல்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சைனாடவுன் பகுதியில் உள்ள புகழ்பெற்ற தியான் ஃபா அறக்கட்டளை வளாகத்தில் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள குவான்யின் ஆலயத்திற்குள் பிற்பகல் 1 மணியளவில் எலக்ட்ரிக் கார் ஒன்று திடீரென வேகமாக புகுந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார், வழிபாட்டுக்காக கூடியிருந்தவர்கள் மீது மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.
மயங்கிய ஓட்டுநர்; கட்டுப்பாட்டை இழந்த கார்
காவல்துறை அதிகாரி அத்ஃபாபோல் தாரோக் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின்படி, காரை ஓட்டிய முதியவருக்கு உயர் ரத்த அழுத்தம் தொடர்பான உடல்நலப் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கியுள்ளார்.
இதையும் படிங்க: மனசே வலிக்குது...! வாடகை பைக்கில் சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்..! நொடியில் நொறுங்கி போன கனவு... நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!
அப்போது அவரது கால் தவறுதலாக ஆக்ஸிலரேட்டரில் பலமாக அழுத்தியதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த எலக்ட்ரிக் செடான் கார் வேகமாக ஆலயத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பக்தர்கள் மீது மோதியது. காயமடைந்த 3 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
68 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் சேதம்
கார் மோதியதில் 68 ஆண்டுகள் பழமையான ஆலயத்தின் சில பகுதிகளும், அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களும் சேதமடைந்தன. விபத்தின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும், கார் குவான்யின் பிரதான சிலையின் பீடத்திற்கு அருகே சென்று நின்றது. இதனால் முக்கிய சிலைக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
காவல்துறை விசாரணை தீவிரம்
காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநரின் உடல்நிலை, வாகனத்தின் செயல்பாடு உள்ளிட்ட அம்சங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பயங்கர விபத்து! சீட் பெல்ட் அணியாததால் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட தாய், மகன்...! ஷாக் வீடியோ..!!!