×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போர்களத்தில் உருவான புதிய கூட்டணி! ஈரானுக்கு எதிராக சவூதி உள்ளிட்ட 6 அரபு நாடுகள் விடுத்த அதிரடி எச்சரிக்கை! ஆதரவு அளித்தவர்களே இப்போ எதிரிகளாக்கியா ஈரான்!!!

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம் மத்தியில், ஈரானுக்கு எதிராக 6 அரபு நாடுகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. பிராந்திய பாதுகாப்பு குறித்து புதிய திருப்பம்.

Advertisement

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பதற்றம் உலக அரசியல் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது. பல நாடுகள் இடையே நிலவும் எதிர்ப்பும் கூட்டணிகளும் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன.

ஈரானுக்கு எதிராக 6 அரபு நாடுகள் எச்சரிக்கை

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் ஆகிய ஆறு அரபு நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ஈரானின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களை மீறுவதாக கடுமையாக சாடப்பட்டுள்ளது.

ஈராக் பகுதியில் செயல்படும் ஈரான் ஆதரவுப் படைகள் மூலம் அண்டை நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், அந்த நாடுகளின் இறையாண்மைக்கு நேரடி சவாலாகக் கருதப்படுகின்றன. மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் ஈரான் மீறிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: அதிர்ச்சி வீடியோ! பூமிக்கு அடியில் உள்ள ரகசிய தளம்! ஈரானின் ரகசிய அண்டர்கிரவுண்ட்டில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஏவுகணை !!!

ப்ராக்ஸி குழுக்கள் மீது குற்றச்சாட்டு

ஈரான் தனது பதிலி அமைப்புகள் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற குழுக்கள் மூலம் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகளை குறிவைப்பதாகவும், இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அரபு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

பாதுகாப்பு உரிமை குறித்து எச்சரிக்கை

ஐ.நா. சாசனத்தின் 51வது பிரிவின் கீழ், தங்களின் பாதுகாப்பிற்காக தேவையான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முழு உரிமை இருப்பதாகவும் இந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இது எதிர்காலத்தில் நிலைமை மேலும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், முன்பு ஈரானுக்கு மறைமுக ஆதரவு அளித்ததாக கருதப்பட்ட சில அரபு நாடுகளே தற்போது எதிராக குரல் கொடுத்திருப்பது, ஈரான் எதிர்ப்பு கூட்டணி உருவாகும் சாத்தியத்தை வெளிப்படுத்துகிறது. இது உலக அரசியல் சமநிலையிலும் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: வெளிச்சத்துக்கு வந்த உண்மை....175 அப்பாவி பள்ளி குழந்தைகள் பலியான கொடூரத்தில் அமெரிக்கா சொன்ன பொய்....சிக்கிய ஏவுகணை ஆதார வீடியோ காட்சி!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#iran #Arab Nations #மத்திய கிழக்கு #Geopolitics #UN Security Council
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story