×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

81 வயதில் 14 மணி நேரம் வேலை..! மனைவிக்காக கஷ்டப்பட்டு வேலை செய்த முதியவர்..! சிசிடிவியை பார்த்து பெண் செய்த அந்த ஒரு காரியம்..! ஒரே நாளில் மாறிய முதியவரின் வாழ்க்கை....! வைரல் வீடியோ..!!!

மனைவியின் புற்றுநோய் சிகிச்சை செலவுக்காக 81 வயதிலும் தினமும் 14 மணி நேரம் உழைத்த டான் ஜான்சனுக்கு பொதுமக்கள் ரூ.2.87 கோடிக்கும் மேல் நிதி வழங்கினர்.

Advertisement

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த 81 வயதான டான் ஜான்சன், தனது மனைவி ஜோசஃபினின் புற்றுநோய் சிகிச்சை செலவுகளை சமாளிக்க தினமும் 14 மணி நேரம் வரை வேலை செய்து வருகிறார். வயது காரணமாக பல நிறுவனங்கள் வேலை வழங்க மறுத்த நிலையில், தொலைந்துபோன சாமான்களை வீடுகளுக்கு சென்று டெலிவரி செய்யும் பணியை அவர் செய்து வந்தார்.

கனமான பையுடன் படியேறிய முதியவர்

சமீபத்தில் எரின் ஹோவல் என்பவரின் வீட்டுக்கு கனமான பையை டெலிவரி செய்ய டான் சென்றுள்ளார். அப்போது மூச்சுத்திணறியபடி தடுமாறிக்கொண்டே படிகளில் ஏறிய அவரது காட்சிகள், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகின. அந்த வீடியோவை பார்த்த எரின், டானின் குடும்பச் சூழ்நிலை குறித்து விசாரித்தபோது, மனைவியின் சிகிச்சைக்காக அவர் கடுமையாக உழைத்து வருவது தெரியவந்தது.

இதையும் படிங்க: மனசே வலிக்குது...! வாடகை பைக்கில் சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்..! நொடியில் நொறுங்கி போன கனவு... நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

GoFundMe மூலம் தொடங்கிய நிதி திரட்டல்

டானின் நிலையை அறிந்த எரின், அவர்களுக்கு உதவுவதற்காக கடந்த செப்டம்பர் 2-ம் தேதி GoFundMe தளத்தில் நிதி திரட்டும் முயற்சியை தொடங்கினார். சமூக வலைத்தளங்களில் இந்த தகவல் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, ஏராளமானோர் தங்களால் முடிந்த உதவியை வழங்கினர்.

இதன் பலனாக இதுவரை சுமார் 2,44,000 அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.2.87 கோடிக்கும் மேல் நிதி திரட்டப்பட்டுள்ளது. எதிர்பாராத வகையில் கிடைத்த இந்த ஆதரவு டான் மற்றும் ஜோசஃபினுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

மனைவியுடன் நேரம் செலவிட முடியும் என நம்பிக்கை

பொதுமக்களின் நிதியுதவி மற்றும் பிரார்த்தனைகள் தனக்கு மிகுந்த நிம்மதியை அளித்துள்ளதாக டான் தெரிவித்துள்ளார். கிடைத்த உதவியின் மூலம் மருத்துவச் செலவுகளை சமாளித்து, விரைவில் கடினமான டெலிவரி பணியில் இருந்து ஓய்வு பெற்று மனைவி ஜோசஃபினுடன் அதிக நேரம் செலவிட முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

 

இதையும் படிங்க: பயங்கர விபத்து! சீட் பெல்ட் அணியாததால் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட தாய், மகன்...! ஷாக் வீடியோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#டான் ஜான்சன் #Texas News #GoFundMe #புற்றுநோய் சிகிச்சை #மருத்துவ செலவு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story