ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்ட 2 சகோதரர்கள்! இப்படி ஒரு கலாச்சாரமா! அதிரவைக்கும் காரணம்! வைரலாகும் வீடியோ...
ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்ட 2 சகோதரர்கள்! இப்படி ஒரு கலாச்சாரமா! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள டிரான்ஸ்-கிரி பகுதியில் பழங்கால பலதார பாரம்பரியத்தின் அடிப்படையில் நடந்த திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த பலதார மணம் வழக்கமாக எப்போதும் புராணங்களில் தான் படித்திருப்போம். ஆனால் இப்போது நேரில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா சவுகான் என்பவரை, சகோதரர்களான பிரதீப் நேகி மற்றும் கபில் நேகி இருவரும் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். மூத்த சகோதரர் பிரதீப் ஜல் சக்தி துறையில் பணியாற்றுகிறார், இளையவர் கபில் வெளிநாட்டில் விருந்தோம்பல் துறையில் வேலை பார்க்கிறார். இந்த திருமணத்தில் அனைத்து சடங்குகளிலும் இருவரும் சமமாக பங்கேற்றனர்.
இதையும் படிங்க: தந்தையிடமிருந்து அண்ணனை காப்பாற்றிய குழந்தை! அதுவும் என்ன ஒரு புத்திசாலித்தனம் பாருங்க! வைரல் வீடியோ...
மணமக்கள் மூவரும் இதைத் தனிப்பட்ட விருப்பத்துடன் எடுத்த முடிவாக கூறியுள்ளனர். “எங்கள் பாரம்பரியத்தில் இது சாதாரணம். நாம் அனைவரும் இதில் சம உணர்வுடன் இருக்கிறோம்” என பிரதீப் தெரிவித்தார்.
மணமகள் சுனிதா, “இது என் விருப்பமான தேர்வு. எங்கள் மரபு மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இது நடந்தது” என கூறினார்.
மூன்று நாட்கள் நீடித்த இந்த கலாசார திருமணத்தில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டு கொண்டாட்டங்களை சிறப்பித்தனர். இந்த பழங்கால கலாச்சாரத்தில் நடந்த திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிங்க: அசுர வேகத்தில் ஓடிய பாம்பை துரத்தி பிடித்த நபர்! இறுதியில் நடந்ததை பாருங்க! வைரலாகும் வீடியோ..