×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி.. பயிற்சி விமானம் பள்ளி வளாகத்தில் விழுந்து பயங்கர விபத்து! 19 பேர் உயிரிழப்பு! வெளியான பதறவைக்கும் வீடியோ காட்சிகள்....

Video : பயிற்சி விமானம் பள்ளி வளாகத்தில் பெரும் சத்தத்துடன் விழுந்து பயங்கர விபத்து! 19 பேர் உயிரிழப்பு! வெளியான பதறவைக்கும் வீடியோ காட்சிகள்....

Advertisement

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில், பயிற்சி விமானம் ஒன்று விழுந்தது. இந்த விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர், உயிரிழந்தவர்களில் 16 பேர் பள்ளி மாணவர்கள், 2 பேர் ஆசிரியர்கள் மற்றும் பைலட் ஒருவர் உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து பிற்பகல் 1:18 மணியளவில் நடந்தது என தீயணைப்பு மற்றும் குடிமைப் பாதுகாப்பு துறையின் அதிகாரி லிமா கானம் தெரிவித்தார். விபத்துக்குப் பிறகு உடனடியாக உத்தரா, மிர்பூர் மற்றும் குர்மிடோலா பகுதிகளிலிருந்து 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு செல்லப்பட்டது. அந்த நேரத்தில் பள்ளியில் விளையாட்டு வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. வகுப்புகள் முடிந்த சில நிமிடங்களில் விமானம் விழுந்ததாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக உத்தரா அதிநவீன மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். “பெரும் சத்தத்துடன் விமானம் விழுந்தது; பின்னர் மாணவர்கள் அலறி ஓடினார்கள்” எனப் பதறியவர்கள் கூறினர்.

இதையும் படிங்க: ச்சீ.. பட்டப்பகலில் கடைக்குள் நுழைந்து மலம் கழித்த பெண்! இறுதியில் செய்த அசிங்கமாக செயல்! பீதியில் உறைந்த ரிசப்ஷனிஸ்ட்! கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..

இவ்விபத்து தொடர்பான அதிர்ச்சிகர வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இது முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதுடன், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதையும் படிங்க: Video: பெத்த மகளை வைத்து இப்படி பண்ணலாமா! தனது 7 வயது மகளின் உயிரை பணயம் வைத்து தந்தை செய்த காரியத்தை பாருங்க! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ....

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#டாக்கா plane crash #உத்தரா school accident #வங்கதேசம் விமான விபத்து #students death in Bangladesh #
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story