மாசம் ரூ.2 லட்சம் சம்பளம், கன்னிப்பையனா இருக்கனும்.. திருமணத்துக்கு பெண் போட்ட லிஸ்ட்.. ஆடிப்போன ஆண்கள்.!
@crustology_ twitter id: திருமணம் செய்ய தனக்கு இப்படிப்பட்ட ஆண் வேண்டும் என பெண் கோரிக்கை வைத்துள்ளார்.
பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தது தற்போது மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது.
திருமணம்:
Marriage Criteria: ஆணோ பெண்ணோ ஒரு நபரிடம் கட்டாயம் உள்ளதை பறிகொடுத்தாக வேண்டும். ஒருசிலர் இதில் விலக்காக இருப்பார்கள். ஆனால், பூமியில் மனிதராக பிறந்த பலரும் ஒரு கட்டத்தில் காதல் வயப்பட்டு அல்லது பெற்றோரின் சம்மதத்தின் பேரில் தங்களின் துணையை தேர்வு செய்கிறார்கள்.
இதையும் படிங்க: இஸ்திரி கடையில் மாதம் ரூ.2 லட்சம் வருமானம்? ஐடி வேலையைவிட அதிகமாம்..!
மாற்றம்:
இவ்வாறான திருமண உறவுகள் என்பது ஏற்ற-இறக்கத்துடன் சென்றாலும், இறுதிவரை பிரியாமல் வாழும் நபர்களும் இருக்கின்றனர். உறவில் இருக்கும் சிக்கலால் புதிய உறவை தேர்வு செய்யும் நபர்களும் இருக்கிறார்கள். தற்போதைய நவீன உலகில் ஒவ்வொருவரின் மனப்பூர்வமான உணர்வுக்கு உரிமை தரப்படுகிறது. அதற்கான மாற்றம் மெல்லமெல்ல நடக்கிறது.
தவறில்லையே:
இதனிடையே, பெண் ஒருவர் சமூக வலைப்பக்கத்தில் தான் திருமணம் செய்யும் நபர் இப்படியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவரிடம் பலரும் தங்களுக்கு தோன்றும் கேள்விகளை கேட்டாலும், ஆண்கள் பெண் ஒருவரை திருமணம் செய்ய பல கோரிக்கைகளை முன்வைக்கும்போது, அதே போல பெண்களும் கேட்பதில் தவறில்லை என பதிலடி தரப்படுகிறது.
கோரிக்கைகள் இதோ:
அதாவது அந்த பெண் தனது பக்கத்தில், "நான் திருமணம் செய்யும் நபர் கன்னிப்பையனாக இருக்க வேண்டும். மாதம் ரூ.2 லட்சம் குறைந்தபட்சம் சம்பாத்தியம் வேண்டும். இயற்கையான அழகை கொண்டிருக்க வேண்டும். உயரம் 6 அடி இருக்க வேண்டும். சமைக்க தெரிய வேண்டும். பெண்களை வெறுக்கும் நபராக இருக்க கூடாது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்த கூடாது.
எங்கு தேடுவேன்??...
பெண் நட்புகள் இருக்க கூடாது. எங்கு சென்றாலும் என்னிடம் சொல்வது / கேட்டுச் செல்லும் பழக்கத்தை கடைபிடிப்பவராக இருக்க வேண்டும். வெளியே சென்றாலும் 24x7 நேரடி இருப்பிடத்தை பகிற வேண்டும். என்னை பல வெளிநாட்டு பயணத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இவ்வாறான நபரை நான் எங்கு தேடுவது?" என கேட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: வியாபாரியை திருடனாக நினைத்த ஜப்பானியர்.. உண்மை தெரிந்ததும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு நெகிழ்ச்சி.!