இஸ்திரி கடையில் மாதம் ரூ.2 லட்சம் வருமானம்? ஐடி வேலையைவிட அதிகமாம்..!
துணிகளை அழகுற இஸ்திரி போடும் நபர் மாதம் ரூ.2 லட்சம் வருமானம் பார்ப்பதாக பெண் கூறிய பதிவு வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு மாதமும் துணிகளுக்கு இஸ்திரி போடுவதால், எளிமையான முறையில் மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பாத்தியம் கிடைப்பதாக பெண் தெரிவித்த பதிவு வைரலாகி இருக்கிறது.
ஓடி ஓடி உழைக்கணும்:
தொழில்நுட்பம் நிலவை தாண்டி ராக்கெட் அனுப்பும் வகையில் வளர்ந்தாலும், ஒவ்வொரு நாளும் அவரவர் உழைத்தால் மட்டுமே சோறு என்பது நிதர்சனமான உண்மையாக இருந்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்களின் படிப்பு, திறமை போன்ற பல காரணிகளை கொண்டு உழைப்பை வெளிப்படுத்தி வருமானம் பார்க்கின்றனர். முந்தைய தலைமுறை, இன்றைய தலைமுறை என உழைப்பை மட்டும் நம்பி இருக்கும் பலரும், உடல்நலக்குறைவு இருந்தாலும் தங்களின் உழைப்பில் குறைவைப்பதில்லை என்பதைப்போல, தங்களின் தேவைக்காக ஓடோடி உழைத்து வருகின்றனர். ஆனால், ஒருசிலருக்கு எவ்வுளவு உழைத்தாலும் போதவில்லையே என்ற வெறுப்பும் ஏற்படும்.
இதையும் படிங்க: ரூ.25 லட்சம் சம்பள வேலையை விட்டு உணவு டெலிவரி வேலைக்கு சேர்ந்த இளைஞர்.. சாதகங்களும், பாதகங்களும்.!
ஒரு தகவல் தலைப்பு செய்தியானது:
இன்னும் சிலரோ எந்த வேலை செய்தால் எளிமையாக அதிக வருமானம் பார்க்கலாம் என வீடியோ வெளியிட்டு சம்பாத்தியமும் கண்டு வருகின்றனர். இதனிடையே, சாலையோர இஸ்திரி கடையை நடத்தி வரும் நபர், மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பாதிப்பதாக பெண் ஒருவர் தெரிவித்த பதிவு வைரலாகியுள்ளது. இந்த பதிவை வெளியிட்ட பெண்மணியின் வீட்டுக்கு அருகில் இஸ்திரி கடை வைத்து நடத்தி வருபவர், ஒரு மாதத்துக்கு சராசரியாக வேலை செய்யும் அளவை கேட்டு, அதற்கான தொகையை கணக்கிட்டு பெண் தெரிவித்த தகவல் பலரையும் திரும்பி பார்க்க வைத்து தலைப்பு செய்தியாக்கி இருக்கிறது.
பதிவில் சொன்னது என்ன?
அந்த பதிவில், "எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் இஸ்திரி கடை உரிமையாளர், சொந்த நிலத்தில் அதனை வைத்து நடத்தி வருகிறார். அவர், அவரது மனைவி மற்றும் 2 வேலையாட்கள் என பணிகள் நடைபெறும். அவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் வருமானம் வருகிறது என்ற செய்தியை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஐடி ஊழியருக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு இணையாக அவர்கள் சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 350 துணிகள் இஸ்திரி வந்தால், துணிக்கு ரூ.10 வீதம் நாளுக்கு ரூ.3500 கிடைக்கும்.
பிரீமியம் துணிகளுக்கு ரூ.350 வரை வாங்கப்படும். 20 துணிகளுக்கு அதில் ஒரு ரூ.7000 கிடைக்கும். மாதம் 3 நாட்கள் மட்டுமே விடுமுறை என்ற வகையில், ஒரு நாளைக்கு மொத்தமாக வரவு ரூ.10,500 என்றால், மாதம் ரூ.2,83,000 ஆகும். நிலத்துக்கு வாடகை இல்லை, மின்சாரத்துக்கு ரூ.6,000 கொடுப்பார்கள். 2 ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ.40,000 என இதனை கழித்தால் நிகர லாபம் ரூ.2.37 லட்சம் வரை கிடைக்கும். அந்தந்த மாதத்தை பொறுத்து என இவர்களுக்கு ரூ.2 லட்சம் வருமானம் சாதாரணமாக கிடைக்கும்" என கூறியுள்ளார்.
ஆதரவும்-எதிர்ப்பும்:
இந்த தகவலை அறிந்த பலரும் தங்களின் புல்லரிப்புகளை கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர். ஒருசிலர் அப்புறம் என்னப்பா வருமான வரித்துறைக்கு இன்னும் தகவல் சொல்லலையா? என்றும் கூறுகின்றனர். உழைப்பை நம்பினால் கட்டாயம் உயர்வு கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக இது அமைந்தாலும், இவ்வாறான விஷயத்தை அடையாளப்படுத்தியது ஆதரவு/எதிர்ப்பு கருத்துக்களையும் பெறுகிறது. உண்மை அறிந்த ஒருசிலரோ, கெமிக்கல், தண்ணீர் விலையெல்லாம் அவர்கள் சொல்லவில்லையா? தண்ணீர், மெஷினுக்கு உண்டான செலவு யார் கொடுப்பார்கள்? அதனை உங்களுக்கு டெலிவரி செய்யவும் ஆகும் செலவு ஒவ்வொரு நாளும் காகித வேண்டாமா? மொத்தமாக ரூ.60,000 லாபம் வந்தாலே பெரிய விஷயம். இதில் 2 லட்சம் என்னமா? என பதில் சொல்கின்றனர்.
இதையும் படிங்க: Emotional Video: முதல் முதலாக சொந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த பெற்றோர்.. இந்த சந்தோஷத்துக்கு ஈடு இணையே இல்லை..!