அட... சூப்பரு! யாருக்கும் தெரியாமல் வாட்ஸ்அப்பில் இனி" ரகசிய மெசேஜ்"அனுப்பலாம்!
வாட்ஸ்அப் புதிய ஸ்பாய்லர் வசதி மூலம் மெசேஜ்களை மறைத்து அனுப்பும் அம்சம் அறிமுகம். முதற்கட்டமாக iOS-ல் சோதனை; தனியுரிமை பாதுகாப்புக்கு முக்கிய அப்டேட்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப், தனது சேவையில் புதிய மாற்றத்தை கொண்டு வரத் தயாராகியுள்ளது. பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு மற்றும் உரையாடல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘ஸ்பாய்லர்’ என்ற புதிய வசதி அறிமுகமாக உள்ளது.
‘ஸ்பாய்லர்’ வசதி எப்படி செயல்படும்?
இந்த புதிய அப்டேட்டின் மூலம், பயனர்கள் தாங்கள் அனுப்பும் செய்திகளை மறைத்து அனுப்ப முடியும். இவ்வாறு அனுப்பப்படும் மெசேஜ்கள் பெறுநருக்கு உடனடியாகத் தெரிவதில்லை. அந்த செய்தியின் மீது ஒருமுறை தட்டினால் மட்டுமே அதன் உள்ளடக்கம் வெளிப்படும். இதனால் தேவையற்ற பார்வைகளைத் தவிர்க்க முடியும்.
முதற்கட்டமாக iOS-ல் சோதனை
தற்போது இந்த அம்சம் iOS பதிப்பில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக உரைச் செய்திகளுக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட உள்ளது. விரைவில் Android உள்ளிட்ட பிற பதிப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: வெளியானது புதிய அப்டேட்! இனி Whatsapp-லும் Cover போட்டோ வசிதி அறிமுகம்!
குழு உரையாடல்களிலும் பயன்பாடு
இந்த புதிய ஸ்பாய்லர் வசதி தனிப்பட்ட உரையாடல்கள் மட்டுமின்றி, குழு அரட்டைகளிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆப்பிளின் iMessage சேவையில் உள்ள அம்சத்தைப் போன்றே செயல்படும். குழுக்களில் முக்கிய தகவல்களை மறைத்து பகிர்வதற்கான வசதியாக இது அமையும்.
எதிர்கால விரிவாக்க திட்டம்
தற்போது டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கு மட்டுமே அறிமுகமாகும் இந்த வசதி, எதிர்காலத்தில் புகைப்படங்கள் மற்றும் PDF கோப்புகளையும் மறைத்து அனுப்பும் வகையில் மேம்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சமூக வலைத்தளங்களுக்கிடையேயான கடும் போட்டியில் முன்னிலை பிடிக்கவும், பயனர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கவும் வாட்ஸ்அப் இந்த மாற்றத்தை கொண்டு வருகிறது.
மொத்தத்தில், பயனர்களின் உரையாடல் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் இந்த அப்டேட், வாட்ஸ்அப் பயன்பாட்டை இன்னும் பாதுகாப்பான மற்றும் நவீன தகவல் பரிமாற்ற தளமாக மாற்றும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வாட்ஸ்அப்பின் புது அப்டேட்.. மெசேஜ்களை ‘Schedule’ செய்யும் புதிய வசதி! இனி அதெல்லாம் மறக்கவே மாட்டோம்.... குஷியில் பயனர்கள்..!!!