வெளியானது புதிய அப்டேட்! இனி Whatsapp-லும் Cover போட்டோ வசிதி அறிமுகம்!
பேஸ்புக், X போல தற்போது WhatsApp இலும் Cover Photo அமைக்கும் புதிய வசதி அறிமுகமாகிவிட்டது. முதற்கட்டமாக பிசினஸ் யூசர்களுக்கே வழங்கப்பட்டு விரைவில் அனைவருக்கும் வரும் என தகவல்.
டிஜிட்டல் உலகில் தொடர்ச்சியான மாற்றங்கள் நடைபெறிக் கொண்டிருக்கும் நிலையில், பயனர்கள் எதிர்பார்க்கும் வசதிகளை வழங்குவதில் WhatsApp மேலும் ஒரு முக்கிய முன்னேற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
WhatsApp-ல் Cover Photo வசதி அறிமுகம்
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் WhatsApp செயலியில், அதிரடி புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. X மற்றும் Facebook போன்ற சமூக வலைதளங்களில் காணப்படும் Cover Photo அமைப்பைபோல், இனி WhatsApp-லும் அத்தகைய கவர் போட்டோ அமைக்கலாம் என்ற வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! சரசரவென குறைந்த தங்கம் விலை! 3 நாளில் சவரனுக்கு இவ்வளவு குறைவா! தங்கம் வாங்க சரியான நேரம்...
முதற்கட்டமாக பிசினஸ் யூசர்களுக்கே
இது தற்போது Beta வெர்ஷனில் பிசினஸ் அக்கவுண்டுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. பயனர்களை மேலும் ஈர்க்கவும், ப்ரொஃபைலை பிராண்டிங் நோக்கில் பலப்படுத்தவும் இவ்வசதி அமையும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வசதி விரைவில் அனைத்து யூசர்களுக்கும் கிடைக்கும் வகையில் Meta தயார்படுத்தி வருகிறது.
பயனர்களுக்கு எதிர்பார்ப்பை கூட்டும் அப்டேட்
WhatsApp தொடர்ந்து வெளியிட்டு வரும் வசதிகள் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கவர் போட்டோ அப்டேட்டும் சமூக வலைதள அனுபவம் மேலும் உயர்த்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதுப்பிப்பு அதிகாரப்பூர்வமாக அனைத்து சாதாரண பயனர்களுக்கும் விரைவில் வெளியாகும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: குஷியோ குஷி! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000-ஆ..? அது எப்போ தெரியுமா?