×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா? மத்திய நிதியமைச்சகம் முக்கிய விளக்கம்!

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூக்கப்படுமா? மத்திய நிதியமைச்சகம் முக்கிய விளக்கம்!

Advertisement

ரூ.2,000 வரையிலான யுபிஐ (UPI) வணிகப் பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் யுபிஐ முக்கிய பங்கு வகித்து வருகிறது. சிறிய கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பல்வேறு இடங்களில் யுபிஐ மூலம் பணம் செலுத்துவது பொதுவான நடைமுறையாக மாறியுள்ளது. பணத்தை உடனடியாக அனுப்பவும், பெறவும் முடிவதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் யுபிஐ பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனிடையே, அதிகரித்து வரும் யுபிஐ பரிவர்த்தனைகளை கையாள்வது, தொழில்நுட்ப கட்டமைப்புகளை பராமரிப்பது உள்ளிட்ட செலவுகள் அதிகரித்து வருவதால், வணிகர் தள்ளுபடி கட்டணம் (MDR) மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என கட்டண சேவைத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.

இதையும் படிங்க: ஆபாச படங்களுக்கு அடிமையான சிறுவன்.. ஆசிரியையின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!

இதனால், ரூ.2,000-க்கும் அதிகமான யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படலாம் என்ற தகவல் சமீபத்தில் பரவியது. இது சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியது.இந்த நிலையில், ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. 

இதேபோல், ரூபே (RuPay) டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் மற்றும் கட்டண சேவை நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் சிறு வணிகர்கள் மற்றும் அன்றாட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு கூடுதல் கட்டணச் சுமை ஏற்படுவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அம்மா.. பயமா இருக்கு! அப்பா குழி தோண்டிட்டு இருக்காரு... மாயமான மகள் தாயிடம் பேசிய கடைசி வார்த்தை! வெளிவந்த திடுக்கிடும் பின்னணி... கொடூர சம்பவம்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#UPI #Debit card #UPI payments #central govt about hydro carbon
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story