ஆபாச படங்களுக்கு அடிமையான சிறுவன்.. ஆசிரியையின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!
ஆபாச படங்களுக்கு அடிமையான சிறுவன்.. ஆசிரியையின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில், இணையம் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குழந்தைகள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.
அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுவன், இணையத்தில் வயதுக்கு மீறிய ஆபாச படங்களை தொடர்ந்து பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, தனது பள்ளி ஆசிரியையின் புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட செயலிகள் மூலம் தவறாக மாற்றியமைத்து இணையத்தில் பரப்பியதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் ஆசிரியைக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் தெரியவந்ததைத் தொடர்ந்து அதிர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து ஆசிரியர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகமும், காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். சிறுவனின் இணையப் பயன்பாடு தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: கணவனா? தோழியா? 4 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!
அப்போது, சிறுவனின் கையில் நீண்ட நேரம் ஸ்மார்ட்போன் இருந்ததும், அவன் இணையத்தில் எத்தகைய உள்ளடக்கங்களைப் பார்க்கிறான் என்பதை பெற்றோர் முறையாகக் கண்காணிக்காததும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவனுக்கு தேவையான உளவியல் ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும்போது வயதுக்கேற்ற கட்டுப்பாடுகள், பெற்றோர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பான இணையப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறு வயதிலேயே இணையத்தில் கிடைக்கும் வயதுக்கு மீறிய உள்ளடக்கங்களின் தாக்கம் குழந்தைகளின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பெற்றோர் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என சமூக வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.