குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித ரோபோக்கள்! உலகத்தையே வியக்க வைக்கும் சீன விஞ்ஞானிகள்...
சீன நிறுவனம் கர்ப்ப கால ரோபோ உருவாக்கத்தில் வெற்றிக்கு அருகில் உள்ளது. செயற்கை கருப்பை தொழில்நுட்பத்துடன் குழந்தையின்மை பிரச்சினைக்கு புரட்சியைக் கொண்டு வரும் முயற்சி.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்க்கையை ஆச்சரியமான மாற்றங்களுக்குத் தள்ளி வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டு போல சீனாவில் புதிய ஆராய்ச்சி ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் முயற்சி
சீன நிறுவனமொன்று கர்ப்ப கால ரோபோ உருவாக்கும் ஆராய்ச்சியில் வெற்றிக்கான முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு "பயோ பேக்" எனப்படும் செயற்கை கருப்பை மூலம் ஆட்டுக்குட்டி பிறப்பித்த விஞ்ஞானிகள், இப்போது மனித உருவ ரோபோக்களில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
செயற்கை கருப்பை அமைப்பு
குவாங்சோவை தளமாகக் கொண்ட கைவா டெக்னாலஜி நிறுவனம், செயற்கை கருப்பை அமைப்புடன் கூடிய மனித உருவ ரோபோவை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. மனித உருவ ரோபோவின் வயிற்றில் பொருத்தப்பட்ட கருப்பை, குழாய்கள் மூலம் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வந்தது செயற்கை தங்கம்! உலக தங்க சந்தையை புரட்டிப் போடக்கூடிய புதிய கண்டுபிடிப்பு! தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஆகுமா!
சந்தை விலை மற்றும் அறிமுகம்
இந்த ரோபோ 2026 ஆம் ஆண்டுக்குள் சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை சுமார் 100,000 யுவானுக்கும் (இந்திய மதிப்பில் ரூ.12.17 லட்சம்) குறைவாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மனித இனப் பெருக்கத்தில் புரட்சி
கர்ப்ப சுமைகளை தவிர்க்க விரும்பும் நபர்களுக்கு மாற்று வழியாக இந்த தொழில்நுட்பம் பெரும் உதவியாக இருக்கும். கர்ப்ப ரோபோ மூலம் குழந்தை பெறுவது சாத்தியமாகுமானால், குழந்தையின்மை பிரச்சினையை சமாளிக்க உலகளவில் இது பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சீனாவின் இந்த முயற்சி வெற்றியடைந்தால், மனித இனத்தின் இனப்பெருக்கத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருப்புமுனையாக அமைந்து விடும்.
இதையும் படிங்க: எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி மரணம்? – ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு...