×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வந்தது செயற்கை தங்கம்! உலக தங்க சந்தையை புரட்டிப் போடக்கூடிய புதிய கண்டுபிடிப்பு! தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஆகுமா!

அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம் கண்டுபிடித்த செயற்கை தங்கம் உலக தங்க சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருத்து.

Advertisement

உலக தங்க சந்தையை புரட்டிப் போடக்கூடிய புதிய கண்டுபிடிப்பு அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறது. இயற்கை தங்கத்தின் இயல்புகளை ஒத்த செயற்கை தங்கம் உருவாக்கும் தொழில்நுட்பம் ஒன்றை கலிபோர்னியா மையமாகக் கொண்ட மாரதான் ஃபியூஷன் (Marathon Fusion) நிறுவனம் உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

அணுக்கரு நுட்பத்தில் தங்க உருவாக்கம்

இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, அணுக்கரு இணைவு உலையில் உருவாகும் நியூட்ரான் கதிரியக்கத்தைக் கொண்டு பாதரசம்-197 (Mercury-197) உருவாக்க முடியும். இந்த பாதரசம்-197, தன்னிச்சையாக தங்கம்-197 ஆக மாற்றமடையும். இது இயற்கையாக காணப்படும் நிலையான தங்கத்தின் வடிவமாகும்.

மாண்டம் கணக்கில் தங்கம் உற்பத்தி

மாரதான் ஃபியூஷன் குழுவின் கணிப்புகளின்படி, ஒரு ஜிகாவாட் அளவிலான வெப்ப மின்சார அணு நிலையம் ஒரு வருடம் முழுவதும் இயங்கினால், அதன் மூலம் பல டன் தங்கம் உருவாக்கக்கூடிய திறன் கொண்டதாகும் என தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: தங்கம் விலை குறையுமா?அதிகரிக்குமா? எப்போது குறையும் என தெளிவாக கூறிய பொருளாதார நிபுணர் சீனிவாஸ்....

தங்க சந்தையில் மாற்றம் ஏற்படும்

இந்த தொழில்நுட்பம் வருங்காலத்தில் பரவலாக பயன்பாட்டுக்கு வந்தால், உலக தங்க சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். அதேசமயம், தங்கத்தின் பொருளாதார மதிப்பிலும் கூடுதல் அதிர்வுகளை உருவாக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த புதிய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் தங்கத்தின் விலையை கட்டுப்படுத்தவும், தொழில்துறையிலும் நிதி உலகத்திலும் புதிய வழிகளுக்கு கதவுகளைத் திறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: பாபா வங்கா கணிப்பின்படி பேரழிவு 82% உறுதி! இனி நடக்கப்போவது என்ன? அதிர்ச்சியில் மக்கள்...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#செயற்கை தங்கம் #Marathon Fusion #artificial gold #அணுக்கரு தொழில்நுட்பம் #gold technology
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story